ரூ. 100-க்கு டிபன்‌ சாப்பிட்டாரா சரோஜா தேவி? ஷாக்கான‌ அன்பே வா ஹீரோ: ஏன்‌ தெரியுமா?

'அன்பே வா' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சரோஜா தேவியின் டிபன் பில்லை பார்த்து படத்தின் ஹீரோ அதிர்ச்சி அடைந்த சம்பவம் குறித்து, தனது பழைய நேர்காணல் ஒன்றில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

'அன்பே வா' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சரோஜா தேவியின் டிபன் பில்லை பார்த்து படத்தின் ஹீரோ அதிர்ச்சி அடைந்த சம்பவம் குறித்து, தனது பழைய நேர்காணல் ஒன்றில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Saroja Devi in Anbe Va

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா துறையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி முக்கிய இடம் பிடித்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த அளவிற்கு எத்தனையோ வெற்றிப் படங்களை இவர் கொடுத்துள்ளார்.

Advertisment

அந்த காலத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்த அவரது படங்கள் பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக, எம்.ஜி.ஆர், சிவாஜி என்று பலருடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. நாயகர்களுக்கு இணையாக அதிகப்படியான ரசிகர் வட்டம் சரோஜா தேவிக்கு இருந்தது.

அப்போதைய முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் மற்றும் சூர்யா ஆகியோருடன் இணைந்து 'ஒன்ஸ்மோர்', 'ஆதவன்' போன்ற திரைப்படங்களிலும் சரோஜா தேவி நடித்துள்ளார். இந்த சூழலில், வயது முதிர்வு காரணமாக நடிகை சரோஜா தேவி இன்று (ஜூலை 14) காலமானார்.

அவரது நினைவலைகளை பலரும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ் யூடியூப் சேனலில் சரோஜா தேவியின் பழைய நேர்காணல் ஒன்று தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 'அன்பே வா' திரைப்படத்தில் பணியாற்றிய போது ஏற்பட்ட சுவாரசிய சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

Advertisment
Advertisements

அதன்படி, "புரொடக்‌ஷன் மேனஜர் ஒரு முறை நான் சாப்பிட்ட மாலை சிற்றுண்டியின் பில்லை கொடுத்துள்ளார். அதில் நான் சாப்பிட்டதற்கு ரூ. 100 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த எம்.ஜி.ஆர் அதிர்ச்சி ஆகி விட்டார். 

உடலை அவ்வளவு சரியாக பராமரிக்கும் நான், எவ்வாறு ரூ. 100-க்கு டிஃபன் சாப்பிட்டேன் என்று ஷாக்காகி விட்டனர். அந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயங்களையும் சரியாக கவனித்து வந்தனர். அதன் பின்னர், ஒரு விழா நடத்தப்பட்டது. அப்போது, ராஜேஷ்வரி அம்மா தங்க குங்குமச்சிமிழ் பரிசாக கொடுத்தார்கள்.

இப்போது வரை அவரது நியாபகமாக அதனை பத்திரமாக வைத்திருக்கிறேன். அன்றைய சூழலில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இடையே ஒரு அன்பு இருந்தது. தொழிலையும் கடந்த அக்கறை கொண்டிருந்தனர். குடும்பத்தினரை போன்று நாங்கள் பழகினோம்" என்று சரோஜா தேவி தெரிவித்துள்ளார். எல்லோரது மனதிலும் இடம்பிடித்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

saroja devi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: