நடிகை சீதா தான் பார்த்திபனை திருமணம் செய்த பிறகு, சினிமாவை விட்டு விலகியதுதான் தான் செய்த பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டதாகக் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 80களின் இறுதியிலும் 90-களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இயக்குனர் நடிகர் ஆர். பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சீதா விரைவாகவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். ரஜினி, கமல், பிரபு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொடிகட்டிப் பறந்தார்.
தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த நடிகை சீதா, ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட நடித்திருக்கிறாராம். நேரம் இல்லாததால், பல நேரங்களில் பட வாய்ப்புகளைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துள்ளார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, நடிகை சீதா சினிமாவில் இருந்து விலகினார்.
அப்போது பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை சீதா, இயக்குனர் ஆர். பார்த்திபன் இயக்கி நடித்த ‘புதிய பாதை’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படத்தின் பாதியிலேயே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது. சீதாவின் வீட்டில் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனை1989 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொட்னார்.
இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அவர்களுக்கு கீர்த்தனா, அபிநயா என்ற மகள்கள் உள்ளனர். சீதா – பார்த்திபன் இருவரும் ராகி என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.
தமிழ் சினிமா உலகில் பலரும் பொறாமைப் படும் அளவுக்கு ஜோடியாக திகழ்ந்த சீதா – பார்த்திபன் ஜோடி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு, நடிகை சீதா நடிகர் சதீஷை திருமணம் செய்துகொண்டார்.
அந்த கால கட்டத்தில் சீதா, சினிமாக்களிலும் டிவி சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். ஆனால், பெரிய அளவில் மீண்டும் பாப்புலர் ஆக முடியவில்லை. இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சதீஷை விட்டும் பிரிந்தார்.
இந்நிலையில், பிஸியாக இருந்த இவருடைய சினிமா வாழ்க்கை பாழாய் போனதற்கு முக்கியமான காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான் என்றும் முதல் முறையாக பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்த சீதா ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறி, பிறகு தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலினால் தான் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை சீதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சினிமாவை விட்டு விலகி போனதுதான் நான் செய்த பெரிய தவறு என்று உருக்கமாக பேசியிருக்கிறார். பெண்களாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி நமக்குன்னு ஒரு அடையாளம் இருக்கும் இடத்திலிருந்து நாம் விலகிப் போனால், பிறகு அந்த அடையாளத்தை பெறுவது ரொம்பவே கஷ்டம். அந்த கஷ்டத்தை நான் அனுபவித்திருக்கிறேன்.
சினிமாவை விட்டு விலகி போய்விட்டு திரும்ப வந்து சேர்வது ரொம்பவே கஷ்டமானது தான். இந்தத் தவறை சினிமாவில் இருக்கும் பலரும் செய்திருக்கிறார்கள். நான் திருமணத்திற்கு முன்பு திருமணமானால் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று பெரிய கற்பனை கோட்டை கட்டி இருந்தேன். அந்த மாதிரி இருக்க வேண்டும் என்று தான் திருமணம் ஆனதும் நடிப்பை விட்டு விட்டு விலகி இருந்தேன். ஆனால், அது நான் செய்த தப்பு என்பது எனக்கு பிறகு தான் தெரிந்தது” என்றுய் நடிகை சீதா உருக்கமாக பேசியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“