/tamil-ie/media/media_files/uploads/2023/06/shalu-shammu-2.jpg)
நாடிகை ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷாலு ஷம்மு முன்னணி நடிகைகளுக்கு இணையாக அரை கோடியில் ஜாகுவார் கார் வாங்கியுள்ளார்.
பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து 2013ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. தனது முதல் படத்திலேயே நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஷாலு ஷம்மு. பின்னர், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/355875207_1613689102374513_7364736069472981444_n.jpg)
நாகர்கோவிலைச் சேர்ந்த ஷாலு ஷம்மு சினிமாவில் நடிப்பததோடு மட்டுமில்லாமல், ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தி வருகிறார்.
நடிகை ஷாலு ஷம்மு ‘சுஹா’ (Suhaa) காஸ்மெடிக் கிளினிக்கின் எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டராக உள்ளார். சினிமா பிரபலங்களின் ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஷாலு ஷம்மு முன்னணி நடிகைகளுகு இணையாக புதிய ஜாகுவார் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஷோ ரூமில் ஜாகுவார் கார் எடுக்கும் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஷாலு ஷம்மு பிரிமியம் ஜாகுவார் கார் வாங்கியது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: “எனக்கு எப்போதுமே பிரீமியம் கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இப்போது எனது கனவு நனவாகியுள்ளது. இறுதியாக எனது ஜாகுவார் எஃப் பேஸ் @hfcarschennai கிடைத்தது என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.