வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த பிரபல நடிகை ஷாலு ஷம்மு என்கிற ஷாம்லி தனது 2 லட்சம் ரூபாய் செல்போனை தொலைத்ததோடு, தொலைத்த இடமும் தெரியாமல் தேடி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், திருட்டு பயலே, றெக்க உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ஷாலு ஷம்மு என்கிற ஷாம்லி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
நடிகை ஷாலு ஷம்மு சென்னை புரசைவாக்கம், வைக்கோல்காரன் தெருவில் வசிக்கிறார். ஷாலு ஷம்மு சமீபத்தில்தான் ரூ.2 லட்சம் மதிப்பில் விலை உயர்ந்த ஐபோனை வாங்கி இருக்கிறார். இவர் கடந்த 9-ம் தேதி சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஷாலு ஷம்மு விருந்து நிகழ்ச்சியை சூளைமேட்டில் உள்ள தனது தோழி வீட்டில் இரவு தங்கி உள்ளார்.
ஷாலு ஷம்மு காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐபோனை காணவில்லை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. செல்போன் எங்கே தொலைந்தது, எங்கே தவறவிட்டோம் என்று தெரியாமல், விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற நட்சத்திர ஹோட்டல், தோழியின் வீடு என எல்லா இடத்திலும் தேடி உள்ளார். அங்கே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களையும் அலசிப் பார்த்துள்ளார். ஆனால், அவர் தனது ஐபோனை எங்கே தொலைத்தார் என்பது மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, நடிகை ஷாலு ஷம்மு தனது செல்போன் தொலைந்தது பற்றி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததற்கான சி.எஸ்.ஆர்.ரசீது பெற்றுள்ளார். மேலும், நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி மற்றும் சூளைமேட்டில் தன்னுடன் தங்கி இருந்தவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர் பட்டியலை போலீசில் கொடுத்துள்ளார். பெயர் பட்டியலில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீசாரும் ஷாலு ஷம்முவின் செல்போனைத் தேடிவருகின்றனர்.
நடிகை ஷாலு ஷம்மு தனது விலை உயர்ந்த செல்போனைத் தொலைத்தது மட்டுமில்லாமல், தொலைத்த இடம் எந்த இடம் என்று தெரியாமல் தேடி அலைத்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“