பிரபல சீரியல் நடிகை ஷாம்பவி, விகடனுக்கு அளித்த நேர்காணலில் தனது நடிப்பு அனுபவங்கள் மற்றும் படத்தில் சிம்புவுடன் நடித்த மறக்கமுடியாத அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். நடிகர் சிம்புவின் படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட விபத்து, ரத்த காயத்துடன் நடித்தது எனப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் சிம்புவுக்குத் தங்கையாக நடிகை ஷாம்பவி நடித்தார். விஸ்காம் படித்துக்கொண்டிருந்தபோது, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஷாம்பவிக்கு கிடைத்ததாகவும் சிம்புவின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்க ஷாம்பவி ஒப்பந்தமானார். இந்நிலையில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால், அவருடைய உடலில் காயங்கள் ஏற்பட்டன. எனினும், படக்குழுவினர் மேக்கப் போட்டு காயங்களை மறைத்து நடிக்க வைத்தனர்.
இது குறித்துப் பேசிய ஷாம்பவி, "அந்த நேரத்தில், படக்குழுவினர் நினைத்திருந்தால் என்னை மாற்றியிருக்கலாம். ஆனால், அவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர். இது என்னுடைய முதல் படம் என்பதால், கௌதம் மேனன் மற்றும் சிம்பு போன்ற பெரிய கலைஞர்களுடன் பணிபுரிந்தது ஒரு பெரிய அனுபவம்" என்றார். மேலும், சிம்பு பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என்றும், ஒரு தங்கையை எப்படி நடத்துவாறோ அப்படித்தான் தன்னையும் அவர் நடத்தினார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த அனுபவம் தனக்கு தன்னம்பிக்கையை வளர்த்ததாகவும் சாம்பவி கூறினார்.
அதேபோல சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கயல்' தொடரின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு ஷாம்பவிக்கு கிடைத்ததாகவும் கூறினார். 'ருத்ரன்' படத்தில் இவரது நடிப்பு இயக்குநருக்கு மிகவும் பிடித்ததால், அவரது கதாபாத்திரத்தை மேலும் விரிவுபடுத்தி எழுதியதாகவும் அவர் கூறினார். தற்போது 'இலக்கியா' சீரியலில் நடிப்பதாகவும் தைரியமான மற்றும் புத்திசாலித்தனமான பெண் கதாபாத்திரத்தில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் ஷாம்பவி கூறினார்.
Advertisment
Advertisements
அதுமட்டுமின்றி தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனலைத் தொடங்கிய அனுபவம் குறித்து பேசிய அவர் ஆரம்பத்தில் சந்தேகத்துடன் இருந்தாலும், தற்போது இருவரும் சேர்ந்து வீடியோக்கள் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.