/indian-express-tamil/media/media_files/2025/07/23/actress-shilpa-majunath-2025-07-23-12-20-57.jpg)
ராமாயணம், மகாபாரதம் ஆகியவை உண்மையாக நடந்ததா என்பதை அறிந்து கொள்ள, டைம் டிராவல் செய்ய விரும்புவேன் என்று நடிகை ஷில்பா மஞ்சுநாத் தெரிவித்துள்ளார். லிட்டில் டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் உடனான நேர்காணலில் சமீபத்தில் கலந்து கொண்ட போது, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கன்னடத் திரையுலகில் 'முங்காரு மலே' என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2018-ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ஷில்பா மஞ்சுநாத். தமிழில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 'காளி' திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். எனினும், 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து, 'தேவதாஸ் பிரதர்ஸ்', 'வெப்', 'சிங்கப்பெண்ணே' போன்ற படங்களில் நடித்துள்ளார். இதேபோல், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இது தவிர சமூக ஊடகங்களிலும் ஷில்பா மஞ்சுநாத் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இந்த சூழலில், லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் பங்கேற்றார். அப்போது, சூப்பர் பவர் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் சுவாரஸ்ய பதில் அளித்தார்.
அதன்படி, "சூப்பர் பவர் கிடைத்தால் டைம் டிராவல் செய்யலாம் என்று நினைப்பேன். ஏனெனில், பலமுறை ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவை உண்மையாக நடந்த சம்பவங்களா? அல்லது கதைகளா? என்று உறுதியாக கூற முடியவில்லை. நம்மிடம் டைம் டிராவல் செய்யும் சக்தி இருந்தால், அந்த காலத்திற்கு சென்று இதனை பார்க்க முடியும்.
இதேபோல், எதிர்காலத்தையும் சென்று பார்க்க விரும்புகிறேன். சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, அதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும்" என்று ஷில்பா மஞ்சுநாத் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.