நடிகை ஷிவானி நாராயணன், தன்னுடைய பதிவுகளில் மூன்றாம் தர கருத்துகளை பதிவிடுபவர்களை உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று சாடியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகை ஷிவானி நாராயணன் தொலைக்காட்சி சீரியல்களில் அறிமுகமானார்.
இதையடுத்து, 2016-ம் ஆண்டு ஷிவானி சரவணன் மீனாட்சி சீசன் 3 சிரியலில் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து மேலும் புகழ்பெற்றார்.
அதற்குப் பிறகு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து தமிழ் டிவி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஷிவானி நாராயணன்.
நடிகை ஷிவானி நாராயணன் சமூக ஊடகங்களில் ரொம்ப ஆக்டிவாக இருக்கிறார். சீரியல்களில் பாந்தமாக நடித்தாலும் ஷிவானி, தனது சமூக ஊடகப் பக்கங்களில் ரொம்ப மாடர்னாக அழகான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஷிவானி நாராயணன் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதே போல, ஒரு சிலர் அவருடைய புகைப்படங்களை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரபாக உள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாகவும் அதற்காக அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது நாளை நிகழ்ச்சி தொடங்கும்போது தெரியவரும்.
இந்த நிலையில், ஷிவானி நாராயணன், தன்னுடைய பதிவுகளில் மூன்றாம்தர கருத்துகளை பதிவிடுபவர்களை கடுமையாக விமர்சித்து சாடியிருக்கிறார்.
ஷிவானி நாராயணன், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, “என்னுடைய பதிவுகளில் மூன்றாம் தர கருத்துகளை பதிவிடும் இழிபிறவிகளுக்கும், அடுத்தவர்களைப் பற்றி கேவலான கருத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் சில யூடியூப் ட்ரோல் பக்கங்களுக்குமே இந்த பதிவு. இது போன்ற மலிவான வீடியோக்களில் பெண்குரல் ஒலிப்பது பரிதாபமாக உள்ளது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.