Advertisment
Presenting Partner
Desktop GIF

ஜிம்மில் அம்மாவுடன் கிக் பாக்ஸிங் பயிற்சி செய்யும் ஷிவானி; லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்

நடிகை ஷிவானி நாராயணன், ஜிம்மில் அம்மாவுடன் கிக் பாக்ஸிங் பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில், அந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
shivani narayanan

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவர் என பரிணாமம் அடைந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன். 

சீரியல் நடிகை, பிக் பாஸ் போட்டியாளர், தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவர் என பரிணாமம் அடைந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

Advertisment

shiv na 1 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். 

சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்தார். இதையடுத்து, வீட்ல விசேஷம், டி.எஸ்.பி, வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

shiv na 1

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக உருவெடுத்துள்ள, சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களைக் கவரும் விதமாக விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

அந்தவகையில் ஷிவானி தற்போது அம்மாவுடன் ஜிம்மில் கிக் பாக்ஸிங் பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். முன்னதாக பாக்ஸிங் தீவிர பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட ஷிவானி, தற்போது அவருடைய அம்மாவுடன் ஜிம்மில் பாக்ஸிங் பயிற்சி செய்யும் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

shiv na 1

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shivani Narayanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment