நடிகை பத்மினியின் நெருங்கிய உறவினரான ஷோபனா ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினியுடன் இவர் நடித்த தளபதி, சிவா படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன குறிப்பாக தளபதி படத்தின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி என கண்களாலேயே கவிதை பாடியவர் ஷோபனா.
கிளாசிகல் டான்சரான இவர் 80களின் காலகட்டங்களில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தவர்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ள இவர் கமல்ஹாசனின் 125வது படத்தில் நடித்துள்ளார்.
தன்னுடைய சிறு வயதில் அதாவது 7 -8 வயதிலேயே தான் வீட்டிற்கு தெரியாமல் கமல்ஹாசனின் அதிகமான படங்களை தனியாக சென்று பார்த்துள்ளதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ஷோபனா தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் 125வது படமான எனக்குள் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள ஷோபனா, ஒரு ரசிகையாக 7 வயதிலேயே தனியாக மைலாப்பூருக்கும் லஸ், அடையார் உள்ளிட்ட இடங்களுக்கும் தான் பஸ்ஸில் ஏறி தனியாக சினிமா பார்க்க சென்றதை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்கும்போது தனக்கு 20 வயதுதான் ஆகியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் 20 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து விடுவார்களாம்.
ஆனால் தளபதி படத்தின் சூட்டிங்கை தன்னுடைய கால்ஷீட்டை தாண்டி மணிரத்னம் எடுத்ததாகவும் ஷோபனா தெரிவித்துள்ளார்.
சூட்டிங்கிற்கு வரும் மணிரத்னம், இன்னும் கொஞ்சம் ஷுட் செய்ய வேண்டும் என்றும் ஆனால் இன்றைக்கு வேண்டாம் நாளைக்கு எடுக்கலாம் என்று சொல்லுவார் என்றும் ஷோபனா தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கும் அனுப்பாமல் தொடர்ந்து இரு தினங்கள் தன்னை அலைகழித்ததாகவும் இதனால் தனக்கு ஒரு கட்டத்தில் அழுகையே வந்துவிட்டதாகவும் ஷோபனா தற்போது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க ரஜினிகாந்தே மிகவும் சிரமப்பட்டதாக முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். அவரது எதிர்பார்ப்பின்படி நடிக்க முடியாமல் திணறிய அவர், பின்பு கமல்ஹாசனின் அறிவுரைப்படி படத்தில் நடித்ததாக கூறியுள்ளார்.
இந்த படத்தில் ரூ பாடலுக்கு ரஜினிகாந்த் கூடவே இவரும் நடிக்கும் போது ஒரு நேரத்தில் கால் தடுக்கி ரஜினி கீழே விழ அப்படியே இவரும் அவர் மீது விழுந்துவிட்டாராம்.
இதை ஒரு சமீபத்திய நேர்காணலில் கூறியிருந்தார் ஷோபனா.