/tamil-ie/media/media_files/uploads/2019/01/Shraddha-Srinath.jpg)
Shraddha Srinath, ஷ்ரத்தா ஸ்ரீநாத்
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் தல 59 படத்தில் விக்ரம் வேதா படம் புகழ் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியானது.
பொங்கல் ஸ்பெஷல் படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் அடுத்தப்படியாக களமிறங்கியிருக்கும் படம் ‘தல 59’. ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம்.
தல 59 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
இப்படத்தை இயக்குநர் எச். வினோத் தமிழில் உருவாக்குகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் பிங்க் படத்தில் நடித்திருந்த டாப்ஸி படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
January 2019For those asking, yes, I will be playing the part that @taapsee essayed and with sheer brilliance, I'd like to add. ???? #AK59#PinkRemake
— Shraddha Srinath (@ShraddhaSrinath)
For those asking, yes, I will be playing the part that @taapsee essayed and with sheer brilliance, I'd like to add. ???? #AK59#PinkRemake
— Shraddha Srinath (@ShraddhaSrinath) January 28, 2019
கடந்த ஆண்டு நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதியும் இணைந்து மெகா ஹிட் கொடுத்த விக்ரம் வேதா படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா நடித்திருந்தார். அந்த படத்தின் ரிலீஸுக்கு பிறகு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
தல 59 படத்தில் ஷ்ரத்தா நடிப்பார் என்று வெளியான தகவலை அவரே உறுதி செய்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.