காதலரை மணந்தார் நடிகை ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது

நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற ஸ்ரேயா சமீப காலமாக திரையில் முகம் காட்டுவதில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கும் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கொசேவ்-ஐ மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில், ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 12-ல் மும்பை லோகந்த்வாலா பகுதியில் அவர் இருக்கும் அடுக்குமாடி வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

×Close
×Close