/tamil-ie/media/media_files/uploads/2019/12/New-Project-2019-12-17T214311.883.jpg)
Actress shriya dancing in Europe countries, shriya dancing in Europe countries, ஸ்ரேயா நடனம், வெளிநாட்டில் ஸ்ரேயா நடனம், நடிகை ஸ்ரேயா, ஸ்ரேயா, shriya dances video, shriya dancese in Europe conunty beach, shriya dancing in Europe countries street,shriya saran, shriya dancese in foreign
வெளிநாடு ஷூட்டிங் சென்றுள்ள நடிகை ஸ்ரேயா அங்கே கடற்கரையில் அனைவரும் கவரும்படியாக நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
இபிஜா, பெரு, மாஸ்கோ நாடுகளில் சுற்றுலாவைவைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரேயா தற்போது ஐரோப்பிய நாட்டு கடற்கரையில் அழகாக நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையான ஸ்ரேயா அந்த்ரெய் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள, ஸ்ரேயா அங்குள்ள ஒரு கடற்கரை தெருவில் மகிழ்ச்சியுடன் அழகாக நடனமாடியுள்ளார். ஸ்ரேயாவின் நடனம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கவர்சியாகவும் அமைந்துள்ளது.
தனது கணவர் அந்த்ரெய் கோஸ்சிவ் உடன், ஸ்ரேயா சில நாட்களுக்கு முன்பு இபிசாவில் ஒரு கடற்கரை ஓரத்தில் ஆடிய நடன வீடியோவை வெளியிட்டார். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அவர் அனுபவிக்கும் விதம் உண்மையில் அனைவரும் கவனிக்கும்படியாக உள்ளது. தற்போது ஸ்ரேயா அவரது அடுத்தப் படமான சண்டக்காரியில் பிஸியாக இருக்கிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக லண்டன் சென்றுள்ளார்.
அண்மையில், நடிகை ஸ்ரேயா ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட பொதுமக்கள் பகுதிக்குள் நுழைந்தபோது லண்டன் போலீசார் அவரை விசாரித்ததாக கூறப்படுகிறது. சுற்றியிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரைத் தடுத்து விசாரித்ததாகவும் அவரது சக நடிகர் விமல் சரியான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு ஸ்ரேயா விடுவிக்கப்பட்டார்.
தற்போது ஸ்ரேயா வெளியிட்டுள்ள அவரது க்யூட் டான்ஸ் வீடியோ இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.