/tamil-ie/media/media_files/uploads/2020/05/shriya-yoga.jpg)
actress shriya saran, shriya saran practice yoga, ஸ்ரேய, நடிகை ஸ்ரேயா யோகாசனம், யோகா, வைரல் வீடியோ, shriya saran yoga, shriya saran practice yoga viral video, viral video, ஸ்ரேயா யோகா வீடியோ, tamil video news, tamil cinema news, tamil viral video news, tamil video news, latest tamil cinema news, latest news in tamil
நடிகை ஸ்ரேயா யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி யோகாசனப் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் நடிகை ஸ்ரேயா. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடனும், தெலுங்கு சினிமாவில் சீரஞ்சிவி, மகேஷ் பாபு ஆகிய முன்னணி நடிகர்களுடனும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா.
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கும் ஆண்ட்ரே கொஸ்சீவ் என்ற வெளிநாட்டவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து இலவசமாக லைவ் யோகாசன பயிற்சிகளை செய்து ரசிகர்களுக்கு யோகா பயிற்சி அளித்து வந்தார். தொடர்ச்சியான யோகா பயிற்சிகளுக்கு பிறகு, உலக யோகா தினம் வரவுள்ள நிலையில், ஸ்ரேயா அவரது நண்பர் சர்வேஷ் சஷி உருவாக்கியுள்ள சர்வா என்ற யோகா யோகா பயிற்சி செயலி பற்றி தெரிவிக்கும் வகையில், யோகா பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், “என்னுடைய பெயர் ஸ்ரேயா சரண், நான் மனதளவில் ஒரு கதக் நடன கலைஞர். பிறகு வாக்கையில் நடிக்க வந்தேன். நான் யோகாவை என்னுடைய அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். யோகா பற்றி புத்தகங்களையும் படித்துள்ளேன். இது அறியவில் பூர்வமான ஒரு மூச்சுப் பயிற்சி. கடந்த சில ஆண்டுகளாக அதிகமான யோகாசனம் பயிற்சி செய்கிறேன். அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.” இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். வீடியோவில் நடிகை ஸ்ரேயா யோகாசனங்களை செய்து அசத்துகிறார்.
இந்த வீடியோ பற்றி ஸ்ரேயா குறிப்பிடுகையில், “நான் யோகாவை நேசிக்கிறேன். யோகா என்னை முழுமையாக்குகிறது. அதனுடைய சக்தியை கொண்டாடுகிறேன். என்னுடைய நண்பர் சர்வேஷ் சஷி சர்வ யோகா ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கான முதல் ஆப் சர்வ ஆப் தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.