scorecardresearch

எழுதி பழகிய காதலன் : வைரலாகும் நடிகை ஸ்ருதிஹாசன் வீடியோ

Tamil Cinema News : காதலரின் வரைதல் திறன் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

எழுதி பழகிய காதலன் : வைரலாகும் நடிகை ஸ்ருதிஹாசன் வீடியோ

Actress Shruthi Haasan Viral Video : நடிகை ஸ்ருதி ஹாசன் வயிற்றில் அவரின் காதலன் சாக் பீஸால் எழுதியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு இந்தியில வெளியான லக் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.  தொடர்ந்து 7-ம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து விஜய் அஜித் விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். பாடகியாகவும் அறியப்பட்ட பல பாடல்கள் பாடியுள்ளார்.

தற்போது தமிழில் லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள இவர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஸ்ருதிஹாசன் ஒருவரை காதலித்து வருதாக தகவல் வெளியான நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது காதலருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் தனது காதலுடன் வசித்து வருகிறார். ஒரு டூடுல் கலைஞரான இவரின்  காதலன் வரைந்த புகைப்படங்களுக்கு மத்தியில் நடிகை ஸ்ருதி ஹாசன் புகைப்படம் எடுத்துக்கொண்டு .சில நாட்களுக்கு முன்பு அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார்.  அந்த புகைப்படம் அப்போது வைரலாக பரவிய நிலையில், தற்போது ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஸ்ஸ்ருதிஹாசன் வயிற்றில் அவரது காதலன் சாந்தனு ‘ THUG LIFE’ என்று சாக் பீஸால் எழுதி பழகிய வீடியோ வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress shruthi haasan released her lover drawiing video

Best of Express