Advertisment

அப்பா கமல் இருக்கும் களத்தில் இப்போது மகள் ஸ்ருதி ஹாசன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shruthi Haasan tv show, ஸ்ருதி ஹாசன்

தந்தை கமல் விஜய் டிவியில் வெற்றிகரமாக இரண்டு பிக்பாஸ் சீசன்களை முடித்துள்ளார். இந்நிலையில், அவரது மகள், ஸ்ருதி ஹாசன் வெள்ளித்திரையில் அதிக வாய்ப்பு கிடைக்காத நிலையில், சன் டிவியின் ஹலோ சகோ எனும் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் கால்பதித்துள்ளார்.

Advertisment

2009 ம் ஆண்டு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக “லக்” எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமானார். கமல்ஹாசனின் மகளான இவர் 2011ம் ஆண்டு சூர்யாவின் 7ம் அறிவு படத்தின் மூலம் கோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார்.

நிகழ்ச்சி தொகுப்பில் இறங்கிய நடிகர்கள்... இப்போது ஸ்ருதி ஹாசன்

கடந்த வருடத்தில் இருந்து அரசியல் பயணத்திற்காக மக்களிடம் பேசுகிறேன் என்று நடிகர் கமல் நிகழ்ச்சி தொகுப்பில் இறங்கினார். இவரைத் தொடர்ந்து நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், பிரசன்னா ஆகியோரும் தொகுப்பாளர்களாக மாறியுள்ளனர்.

விஷால் ஒரு புறம் சன் டிவியில் சமூக அக்கறை என்ற பெயரில் உதவி நாடி வருபவர்களுக்கு உதவுவது போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவரது நெருங்கிய தோழி, ஜய டிவியில் மற்றொரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதனிடையே விரைவில் வரவுள்ள “ஹலோ சகோ“ நிகழ்ச்சியை கமல் மகள் ஸ்ருதி தொகுத்து வழங்குகிறார். அதன் புரமோ வீடியோ தற்போது சன் டிவியில் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் பிரபலம் யார் என்பதைச் சஸ்பென்ஸுடன் வைத்திருக்கும் காட்சிகளும் அந்தப் புரமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment