கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு பிசிஒஎஸ் மற்றும் எண்டோமேட்ரியோசிஸ் பாதிப்பு இருப்பதாக கூறிய நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஹிந்தி தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், பிரபலாஸூடன் சலார், பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், தனக்கு பிசிஒஎஸ் மற்றும் எண்டோமேட்ரியோசிஸ் பாதிப்பு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தாலும், உரிய சிகிச்சை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அதில் இருந்து மீள முடியும் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி மெற்கொண்டு தானும் இந்த பதிப்பில் இருந்து மீள முயற்சித்து வருவதாக கூறியிருந்தார். அவரின் இந்த பதிவு வைரலாக பரவிய நிலையில், அவர் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று கூறி பலரும் வாழ்த்துக்களை கூறி வந்ததனர். சினிமா வட்டாரத்திலும் பலர் ஸ்ருதிஹாசனுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கம் அளித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இதில், எனக்கு கடந்த ஒரு ஆண்டுகாலமாக இந்த பிரச்சினை உள்ளது. ஆனாலும் தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். பிசிஒஸ் மற்றும் எண்டோமேடரியோசிஸ் பற்றி பெண்கள் மத்தியில் நல்ல சிந்தனையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் வீடியோவை பதிவிட்டேன்.
ஆனால் இதை பலர் தவறாக புரிந்துகொண்டு பெரிய பாதிப்பு இருப்பது போன்று பிம்பத்தை ஏற்படுத்திவிட்டனர். பிசிஒஎஸ் பாதிப்பினால் கவலைப்படும் அளவுக்கு நான் பாதிக்கப்படவில்லை தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என் மீது அக்கரை காட்டிய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“