வீங்கிய முகம்.... மோசமான முடி... ஸ்ருதிஹாசனுக்கு என்ன ஆச்சு?

தெலுங்கில் கவனம் செலுத்திய ஸ்ருதி தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலக்கிருஷ்ணாவுடன் வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் கவனம் செலுத்திய ஸ்ருதி தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலக்கிருஷ்ணாவுடன் வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
வீங்கிய முகம்.... மோசமான முடி... ஸ்ருதிஹாசனுக்கு என்ன ஆச்சு?

தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஸ்ருதிஹாசன் மோசனமா முடி, வீங்கிய முகத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisment

தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக 7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதன்பிறகு தெலுங்கில் கவனம் செலுத்திய ஸ்ருதி தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலக்கிருஷ்ணாவுடன் வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் சில சமயங்களில், க்ளாமர் புகைப்படங்களை வெளியிடும் அவர், மேக்கப் இல்லாமல்கூட சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரியான செல்ஃபிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த உலகில் பதிவிடுவதற்கு தேர்வாகத புகைப்படங்கள் இவை. மோசமான முடி, காய்ச்சல் மற்றும் சைனஸ் வீங்கிய நாள், மாதவிடாய் நாள் மற்றும் பல நாட்களில்... இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்  என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனை பாராட்டி வருகின்றனர். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் இவ்வளவு வெளிப்படையாக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது அனைவரையும் ஆச்சியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இவ்வளவு வெளிப்படையாக இருப்பதற்கு நன்றி என்று கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Shruti Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: