19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் யூத்… ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு சிம்ரன் மாஸ் டான்ஸ்
இப்போதும் நடிகை சிம்ரன் அதே வேகத்துடன் அதே துள்ளலுடன் டான்ஸ் ஆடியிருக்கிறார். சிம்ரன் மீண்டும் யூத் படத்தின் ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சிம்ரன், நடிகர் விஜயின் யூத் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு, யூத்களுடன் சேர்ந்து ஒரு மாஸ் டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் 1990களின் நடுப்பகுதிக்கு பிறகு 2000களில் முதல் பாதிவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். சிம்ரன் அவரது நடிப்புக்காகவும் டான்ஸ்க்காகவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்தார். ஆனாலும், சிம்ரன் தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
சினிமாவில் பிஸியாக இருந்த சிம்ரன், 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு, சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் அவ்வப்போது வாரணம் ஆயிரம், துப்பறிவாளன், பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, சிம்ரனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிம்ரன் சினிமாவில் தீவிரமாக ஈடுபடாவிட்டாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் சிம்ரன் போடும் ரீல்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வைரலாவதும் உண்டு.
அந்த வரிசையில் நடிகை சிம்ரன், தான் விஜய் உடன் சேர்ந்து நடனம் ஆடிய யூத் படத்தின் ஆல் தோட்ட பூபதி நானடி என்ற பாடலுக்கு மீண்டும் யூத்களுடன் சேர்ந்து ஒரு மாஸ் டான்ஸ் ஆடியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த யூத் திரைப்படம் 2002ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வின்செண்ட் செல்வா இயக்கி இருந்தார். மணி ஷர்மா இசையமைத்திருந்தார். யூத் படத்தில் ஹிட்டான ஆல்தோட்ட பூபதி பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ஆல் தோட்ட பூபதி பாடல் அன்றைய யூத்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஃபாஸ்ட் பீட் பாடல். அதற்கு காரணம், இந்த பாடலுக்கு சிம்ரனும் விஜயும் சேர்ந்து செமயாக ஆடியிருப்பார்கள்.
யூத் படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நடிகை சிம்ரன் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு இன்றைய யூத்களுடன் சேர்ந்து ஒரு மாஸ் டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்போதும் நடிகை சிம்ரன் அதே வேகத்துடன் அதே துள்ளலுடன் டான்ஸ் ஆடியிருக்கிறார். சிம்ரன் மீண்டும் யூத் படத்தின் ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.