''காவாலா'' பாடலுக்கு சிம்ரன் நடனம்... தமன்னா வெளியிட்ட பதிவு : வைரல் வீடியோ

ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி படம் வெளியாக உள்ளது.

ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி படம் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kavala Simran

காவாலா பாடலுக்கு சிம்ரன் நடனம்

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியிலர் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஏஐ மூலம் இந்த பாடலுக்கு நடிகை சிம்ரன் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி படம் வெளியாக உள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் முதல் ஃபர்ஸ்ட் சிங்கிள் காவாலா பாடல் வெளியானது. அருண்ராஜா காமராஜ் எழுதீயளு்ளு இந்த பாடல் அனிருத் இசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் குழந்தைகள் மத்தியிலும் ஒரு வைபை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குழந்தை காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ பதிவு இணையத்தில் ட்ரெண்டான நிலையில், தற்போது ஏஐ எனப்படும், ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் (Artificial intelligence) தொழில்நுட்பத்தின் மூலம் ‘காவாலா’ பாடலுக்கு நடிகை சிம்ரன் நடனமாடும் வகையிலான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை நடிகை தமன்னாவே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டியதுடன் நடிகை சிம்ரனையும் டேக் செய்துள்ளார். இந் வீடியோ பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Simran Tamanna Bhatia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: