New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/4J9E03VxDkGFyMnxxkhL.jpg)
டப்பா ரோலில் நடிப்பதை விட... சிம்ரனை ஆன்டி ரோல் நடிகை என சொன்னது யார்? இணையத்தில் பரபர வாதம்!
பெண் பிரபலங்களை கவுரவிக்கும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டு விருது பெற்ற நடிகை சிம்ரன், சக நடிகை தன்னை ஆன்டி ரோலில் நடிப்பதை கிண்டலாக பேசியது குறித்து வெளிப்படையாக பேசி இருப்பது யார் அந்த நடிகை என்று? இணையத்தில் கேள்விகளை எழுப்பி உள்ளது.
டப்பா ரோலில் நடிப்பதை விட... சிம்ரனை ஆன்டி ரோல் நடிகை என சொன்னது யார்? இணையத்தில் பரபர வாதம்!
1990, 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கதாநாயகியாக ஜொலித்த சிம்ரன் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சரத்குமார், முரளி, பிரபுதேவா, அர்ஜுன் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து உள்ளார். தற்போது குறைவான அளவிலே படங்களில் நடித்து கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார் சிம்ரன்.
சிம்ரனை சீண்டிய நடிகை யார்?
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிம்ரனுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர், தன்னுடன் நடித்த ஒரு நடிகைக்கு சமீபத்தில் மெசஜ் அனுப்பிய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். “இந்த கதாப்பாத்திரத்தில் உன்னை பார்ப்பதற்கு சர்ப்ரைஸாக இருந்தது..” என்று கூறியிருக்கிறார். அதற்கு எதிரில் இருந்த அந்த நடிகை, “ஆன்டி ரோலில் நடிப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை..” என்று கூறியிருக்கிறார். நடிகையின் அந்த பதிலுக்கு, ரிப்ளை கொடுக்க நினைத்த சிம்ரன், “டப்பா கதாப்பாத்திரங்களிலும் நடிப்பதற்கும், எதிலுமே நடிக்காமல் இருப்பதற்கும் இந்த ஆன்டி ரோலும், அம்மா ரோலும் எவ்வளவோ பரவாயில்லை..” என்று கூறியிருக்கிறார்.
Simran: i Messaged a Female Co-Actor I was surprised to see you in that role
— AmuthaBharathi (@CinemaWithAB) April 20, 2025
Co-Actor: Atleast it's better than doing a Aunty role
Simran:Such an insensitive reply i got. It's better to do Main Aunty roles than doing Dabba rolepic.twitter.com/XcmPifCodl
ஜோதிகாவா?
தற்போது சிம்ரன் குறிப்பிட்ட அந்த நடிகை யார்? என்று இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. ஒருசில இணையவாசிகள் சிம்ரன் குறிப்பிட்டது ஜோதிகா என்று சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஏனென்றால், சிம்ரன் முன்னணி கதாநாயகியாக நடித்த காலத்தில் அவருக்கு நிகரான கதாநாயகியாக உலா வந்தவர் ஜோதிகா. சமீபத்தில் ”டப்பா கார்டல்” என்ற இந்தி வெப்சீரிஸில் ஜோதிகா நடித்துள்ளார். சிம்ரன் டப்பா என்று மறைமுகமாக ஜோதிகாவையே குறிப்பிட்டிருப்பதாக நெட்டிசன்கள் சிலர் ஜோதிகாவை விமர்சித்து வருகின்றனர்.
லைலாவா?
இன்னும் சிலர் சிம்ரன் நடிகை லைலாவை குறிப்பிட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சில இணையவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பிரசாந்திற்கு நாயகியாக பார்த்தேன் ரசித்தேன் படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு வெளியான வதந்தி வெப்சீரிஸில் நடிகை லைலா தனது மகளுக்குத் தெரியாமல் தன்னை விட வயதில் குறைந்த இளைஞனுடன் தொடர்பில் இருப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அண்மையில் வெளியான் சப்தம் படத்திலும் நெகடிவ் கதாபாத்தில் லைலா நடித்திருந்தார். இதுதொடர்பான விவாதத்தின்போது லைலா சிம்ரனை இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் சில இணைய வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை லைலாவுடன் சப்தம் படத்தில் சிம்ரன் நடித்திருந்தபோது தான் இந்த பிரச்சனை வெடித்தது என்றும் கூறுகின்றனர். விஜய்யின் கோட் படத்தில் பிரசாந்த் ஜோடியாக டம்மி ரோலில் லைலா நடித்ததை தான் சிம்ரன் கிண்டல் செய்ய பதிலுக்கு அவர் சிம்ரனை இப்படி பேசினார் என்று கூறுகின்றனர்.
இன்னும் சிலர் த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் சிம்ரனுக்கு இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்நிகழ்ச்சியில் சிம்ரன் தனக்கு இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பிய நடிகை யார் என்று? தெரிவிக்கவே இல்லை.
சிம்ரன் இந்த வருடத்தில் மட்டும் சப்தம் மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்திருக்கும் டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதே போல, தி லாஸ்ட் ஒன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.