பிரசவத்திற்கு பிறகு வெயிட் போட்ட சினேகா; ஃபிட்டாக கடுமையான வொர்க் அவுட்

நடிகை சினேகா பிரசவத்திற்குப் பிறகு, ஓவர் வெயிட் போட்டதால், உடல் எடையைக் குறைக்க கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

By: August 1, 2020, 4:32:27 PM

நடிகை சினேகா பிரசவத்திற்குப் பிறகு, ஓவர் வெயிட் போட்டதால், உடல் எடையைக் குறைக்க குழந்தைகளுடன் சென்று கடுமையாக வொர்க் அவுட் செய்து வருகிறார். சினேகா கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. ரசிகர்களால் புன்னகை அரசி என்று கொண்டாடப்பட்ட நடிகை சினேகா 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

சினேகா- பிரசன்னா தம்பதியருக்கு 2015-ம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விஹான் என்று பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது, சினேகா தனது இன்ஸ்டாகிராமில் கணவர் பிரசன்னா, மகன் விஹானுடன் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

நடிகை சினேகா கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகை சினேகாவுக்கு இரண்டாவது பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளனர். சினேகா குழந்தை ஆத்யந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தை மகள் வந்தாள் என்று மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அந்த புகைப்படம் அப்போது சமூக ஊடகங்களில் வைரலானது.

இதே கால கட்டத்தில், சினேகா தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் சினேகாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.

அதே நேரத்தில், சினேகா குழந்தையை வளர்ப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டார். பிரசவத்திற்குப் பிறகு, உடற்பயிற்சிகள் ஏதும் செய்யாததால் சினேகா ஓவர் வெயிட் போட்டுவிட்டார். இதனால், உடல் எடையைக் குறைக்க சினேகா தீவிரமாக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


சினேகா கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில வைரலாகி வருகிறது. வீடியோவில், சினேகா ஈசிஆர் பகுதியில் கடற்கரையோரம் உள்ள ஒரு வீட்டில் மாடியில் உடற்பயிற்சி மெஷினில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்கிறார். சினேகா உடற்பயிற்சி செய்யும்போது அவருடன் மகன் விஹான், மகள் ஆத்யந்தா ஆகியோர் உள்ளனர்.

வீடியோ குறித்து சினேகா குறிப்பிடுகையில், ”ஃபிட்டான ஆரோக்கியத்தை நோக்கி என்னுடைய உடற்பயிற்சி பயணம் தொடங்கியது. நிச்சயமாக நாம் அனைவரும் கடினமான காலத்தில் இருக்கிறோம். என்ன செய்தாலு எதிர்காலம் நம்மிடம் இருக்கிறாது. நாம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்போம். இதுவும் கடந்துபோகும்” என்று குறிப்பிட்டுள்ளார். சினேகாவின் வொர்க் அவுட் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகிறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actress sneha heavy work out to get fit viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X