/indian-express-tamil/media/media_files/ImyayqnKQDeC0M5oOmyC.jpg)
நடிகை சினேகா டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி போட்டியாளர் ஒருவரிடம் மேடையில் கூறியதை நிஜத்திலும் செய்து காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை சினேகா, ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நிலையில், அந்த நிகழ்ச்சியி போட்டியாளர் ஒருவரிடம் மேடையில் கூறியதை நிஜத்திலும் செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சினேகா தான் நடுவராக இருக்கும் ஜீ தமிழ் டிவி டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சின் போட்டியாளர் ஒருவரை தன்னுடைய வீட்டிற்கே வரவழைத்து தன் கையால் சமையல் செய்து அவருக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்திருக்கிறார்.
ஜீ தமிழ் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சமூக பொருளாதார சூழல்களில் அடித்தட்டி இருப்பவர்களும் பங்கேற்று பிரபலமாகி இருக்கிறார்கள். இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா, பாபா மாஸ்டர், சங்கீதா உள்ளிட்டோர் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது. அதில், போட்டியாளராக இருக்கும் சுரேஷ் என்பவரை பார்த்து நடிகை சினேகா ஒரு நாள் என்னுடைய வீட்டுக்கு வாங்க என் கையாலேயே நான் சமைத்து சாப்பாடு தருகிறேன் என்று சொல்லி இருந்தார்.
சினேகா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மேடையில் கூறியதை அப்படியே மறந்து விடாமல், அந்த போட்டியாளர் சுரேஷை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து உணவு பரிமாறி அவருக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்து இருக்கிறார். சினேகா தன்னுடைய கையால் சாப்பாடு ஊட்டியதும் கண் கலங்கிய சுரேஷுக்கு சினேகா சிரித்தப்படியே ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
நடிகை சினேகா இயலாதவர்களுக்கு உதவி செய்வதோடு தன்னுடைய குழந்தைகளையும் அப்படி உதவி செய்ய வேண்டும் என பழக்கப்படுத்துவதைப் பார்த்து பலரும் சினேகாவை பாராட்டி வருகிறார்கள். தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி போட்டியாளருக்கு தன்னுடைய கையால் சமைத்து சாப்பாடு பரிமாறி விட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.