Advertisment

23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியான சினேகா; GOAT பட அப்டேட்

'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் இணைந்த சினேகா; 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாகிறார்

author-image
WebDesk
New Update
sneha goat

'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் இணைந்த சினேகா; 23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாகிறார்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் நடிகை சினேகா விஜய்க்கு ஜோடியாகியுள்ளார்.

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற புதுமுக நடிகை நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப்படத்தில் விஜய் உடன் அஜ்மல், மைக் மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, வைபவ், பிரேம்ஜி, லைலா, சினேகா, நிதின் சத்யா, அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்தநிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிகை சினேகா ஜோடி சேர்ந்துள்ளார். விஜய் மற்றும் சினேகா கடைசியாக 2003 ஆம் ஆண்டு கே.செல்வ பாரதி இயக்கத்தில் வெளியான 'வசீகரா' படத்தில் இணைந்து நடித்தனர். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சினேகா, "தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டோம். தளபதி சிறப்பாக செயல்படுகிறார். .அவர் மிகவும் இனிமையான மனிதர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்கும் போது, ​​இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர் எப்படி ஒரே மாதிரியாக இருக்கிறார் என்று கேட்டேன், அதற்குப் பதிலாக அவர் என்னிடம் அதையே கேட்டார். விஜய் தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார், அவர் ரசிகர்களை மிகவும் மதிக்கிறார், அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்.

இதற்கிடையில், சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா, 'வாரிசு' படத்தில் விஜய்யின் அண்ணியாக நடிக்க சினேகாவை அணுகியதாகவும், ஆனால் அதை சினேகா நிராகரித்ததாகவும், அவர் அப்படி செய்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், அந்த முடிவு தற்போது 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க அவருக்கு உதவியிருக்கலாம் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Sneha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment