சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நடித்து வந்த கன்னட நடிகை சோபிடா சிவான்னா ஐதாரபாத்தில் திடீரென மரணம் அடைந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிள்ளது. கடந்த ஆண்டு திருமணமாகி ஐதராபாத்தில் கணவருடன் வசித்து வந்த நிலையில் சோபிதா சிவான்னா திடீரென மரணம் அடைந்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த நடிகை சோபிதா சிவான்னா கன்னட சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மற்ற மொழி சீரியல்களிலும் நடித்து வந்தார். இதன் மூலம், கன்னடத்தில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சோபிதா சிவான்னா. இவர் பிரம்மகந்து உள்ளிட்ட சீரியல்கள் மூலம் ஏராளமான கன்னட ரசிகர்களைப் பெற்றிருந்தார். ஜாக்பாட், அபார்ட்மெண்ட் டூ மர்டர், வந்தனா போன்ற திரைப்படங்களிலும் சோபிதா சிவான்னா நடித்துள்ளார்.
நடிகை சோபிதா சிவான்னாவுக்கு கடந்த ஆண்டு மே 22-ம் தேதி திருமணம் நடந்த நிலையில், ஐதராபாத்தில் தனது கணவருடன் வசித்து வந்தார். இவர் நடித்துள்ள, ‘முதல் நாள் முதல் காட்சி’ படம் ரிலீசாகவுள்ள நிலையில், இந்த படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதே போல, தீபாவளி பண்டிகையின்போது, ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட சோபிதா சிவான்னா, ஐதராபாத்தில் கணவருடன் வசித்டு வந்த நிலையில், அவர் தீடீரென மரணம் அடைந்துள்ளார். சோபிதா சிவான்னாவின் மரணம் குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஐதராபாத் விரைந்துள்ளனர். சோபிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெங்களூருவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோபிதாவின் திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“