scorecardresearch

நடிகர் விஜய்-க்கு உறவினர்: ஷோபாவுடன் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அருவி சீரியல் நடிகை சோனியா, விஜய்யின் அம்மா ஷோபாவுடன் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

actress sonia, actress sonia relation to vijay, actress sonia with vijay's mother Shoba photo, Shoba, நடிகர் விஜய்-க்கு உறவினர், ஷோபாவுடன் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை சோனியா, விஜய் அம்மா ஷோபா, சோனியா, அருவி சீரியல், aruvi serial, sun tv, vijay's mother shoba
அருவி சீரியல் நடிகை சோனியா

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அருவி சீரியல் நடிகை சோனியா, விஜய்யின் அம்மா ஷோபாவுடன் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான அழகி சீரியலில் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சோனியா. இவர் திருமணத்துக்குப் பிறகு, சீரியல்களில் நடிக்காமல் இருந்தார்.

நடிகை சோனியா ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, தற்போது சன் டிவியில் ஒளிபாகி வரும், அருவி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் 400 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

அருவி சீரியலில் பூவே பூச்சூடவா தொடரில் நடித்த கார்த்திக் வாசு கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகர் லிங்ஸ்டனின் மகளும் பூவே உனக்காக தொடரில் நடித்து பிரபலமானவருமான ஜோவிதா லிவிங்ஸ்டன் ஹீரோயினாக நடிக்கிறார்.

அருவி சீரியல் கன்னட தொடரான ‘கஸ்தூரி நிவாசா’ என்ற சீரியலின் ரீமேக் ஆகும். இந்த தொடரில் அம்பிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சோனியா விக்ரம் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சோனியா, சோனியா அப்பபோது தனது புகைப்படங்களையும் ரீல் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள்.

சோனியாவை திருமணம் செய்தவர் நடிகர் விஜயின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான உறவினர் என்று கூறப்படுகிறது. அதனால், சோனியாவுக்கு விஜய்யின் அம்மா ஷோபாவின் நட்பு கிடைத்துள்ளது. ஷோபாவுக்கு சோனியாவுக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் இவர் எனக்கு நெருங்கிய தோழி என்று கூறியுள்ளார்.

அம்மாவும் தோழியுமான ஷோபா அம்மாவுடன் எனது வீட்டில் என்று சோனியா புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress sonia shares photo with vijayss mother shoba

Best of Express