Advertisment
Presenting Partner
Desktop GIF

'நிறைய வித விதமான செருப்பு இருக்கு'... விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீரெட்டி

"கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. மேலும், என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன." என்று விஷாலின் பேட்டிக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

author-image
WebDesk
New Update
Actress Sri Reddy Respond to Actor Vishal speech about Malayalam cinema Tamil News

"உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது, இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை." என்று விஷாலின் பேட்டிக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

மலையாள திரையுலகில் நடைபெறும் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, கேரள அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அந்த கமிட்டி கொடுத்த விசாரணை அறிக்கை மூலம், பல முன்னணி கதாநாயகர்கள் தொடங்கி தயாரிப்பாளர்கள், என பலர் மீது குற்றசாட்டுகளும் புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

Advertisment

இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார். அப்போது உங்கள் மீதே ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்தாரே என்கிற கேள்வி கேட்டதும், சிரித்துக்கொண்டே பதிலளித்த விஷால், 'ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது. அவங்க செஞ்ச சேட்டைகள் தான் எனக்கு தெரியும்' என கூறினார். 

இந்த நிலையில், விஷாலின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ரீரெட்டி தனது எக்ஸ் தள பக்க பதிவில், "வணக்கம் மிஸ்டர்.. பெண்களை விரும்புபவரே.. வெள்ளை முடி... மிகவும் வயதான மாமா பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் உமனைசரான நீ பேசலாமா? ஒரு பெண்ணை பற்றி பேசும் போது உன்னுடைய நாக்கு ரொம்பவே கேர்புல்லாக இருக்க வேண்டும். உலகத்துக்கே தெரியும் நீ எவ்ளோ பெரிய பிராடு என்று ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் போது உன் உடல் ஏன் நடுங்குது, நீயெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போறியா? அதெல்லாம் சரி உன்னுடன் இருந்த பெண்கள் எல்லாம் உன்னை ஏன் விட்டுச் சென்றனர்.

உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது, இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. மேலும், என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன." என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Tamil Cinema Actor vishal Sri Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment