விஷாலையும் விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி TAMIL LEAKS!

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS : லிஸ்ட் தொடர்ந்து நீண்டுக் கொண்டே செல்வதால் இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ?

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் திரையுலகை மையம் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி TAMIL LEAKS யின் அடுத்த பார்வை விஷாலின் மீது திரும்பியுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர், இயக்குனர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருப்பவர் தான் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த 3 மாதங்களாக தெலுங்கு சினிமாவை படாதபாடுபடுத்திக் கொண்டிருந்த ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்கள் பற்றி இவர் வெளியிடும் தகவல்கள் ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக குற்றம்சாட்டி அதனை அரை நிர்வாணப் போராட்டம் வரை கொண்டு சென்றவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி. தனது முகநூல் பக்கத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் இவர், தனத்திடம் தவறாக பேசிய பிரபலங்கள், தன்னிடம் ஆபசமான ஃபோட்டோக்களை கேட்ட நடிகர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரின் தகவல்களையும் ஆதரத்துடன் வெளியிட்டு வருகிறார்.

தெலுங்கு சினிமாவுடன் இவரது புரட்சி நின்று விடும் என்று நினைத்தால், தற்போது தமிழ் சினிமாவை கையில் எடுத்துக் கொண்டு தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தனது புரட்சியை விடாமல் செய்து வருகிறார்.

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS லிஸ்டில் இடம்பிடித்தவர்கள்:

கடந்த 2 நாட்களாக ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக்கில் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் ஆகியோர் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலில் ஸ்ரீரெட்டி கூறியிருந்த விஷயங்கள் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் ஸ்ரீரெட்டி பகிர்ந்திருந்த தகவலுக்கு லிஸ்டில் இருந்த எந்த சினிமா பிரபலங்களும் மறுப்பு தெரிவித்து எந்த ஒரு பேட்டியும் அளிக்காமல் இருந்தது இந்த விஷயுத்தை மேலும் உற்று நோக்க வைத்தது.

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: ஸ்ரீரெட்டியின் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் , ராகவா லாரன்ஸ்

ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: ஸ்ரீரெட்டியின் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் , ராகவா லாரன்ஸ்

இந்நிலையில் தான் நடிகர் சங்கத் தலைவர் விஷால் தனக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக ஸ்ரீரெட்டி பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுக் குறித்து தனது முகநூலில் ஸ்ரீரெட்டி கூறியிருப்பது, “ நடிகர் விஷால் ரெட்டியிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்து இருக்கிறது. இருந்தாலும் நான் நிறுத்த போவதில்லை கோலிவுட்டின் இருண்ட பக்கத்தை கண்டிப்பாக வெளிச்சம் போட்டு காட்டுவேன்” என்று கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி இந்த பதிவு தமிழ் சினிமாவில், மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் ஸ்ரீரெட்டில் வெளியிடும் பிரபலங்களின் லிஸ்ட் தொடர்ந்து நீண்டுக் கொண்டே செல்வதால் இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ? என்று ரசிகர்களையும் தோன்ற வைத்துள்ளது.

×Close
×Close