/tamil-ie/media/media_files/uploads/2021/07/sridevi-ashok-1.jpg)
பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படட்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலை திரைப்படங்களில் நடித்தார். ஆனால், திரைபடங்களில் இவருக்கு பெரிய வாய்புகள் இல்லாததால், டிவி சீரியல்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தினார்.
சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானார். தொடர்ந்து, கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு நடனத்திலும் கலக்கினார்.
இன்றைக்கு சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணி சேனல்களான சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பான சீரியல்களில் ஸ்ரீதேவி அசோக், வில்லி, குணசித்திர கதாபாத்திரம் என நடித்துள்ளார். ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார். இந்த சீரியல் இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
நடிகை ஸ்ரீதேவி அசோக் 2019ம் ஆண்டு புகைப்படக் கலைஞர் அசோக்-ஐ திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்த ஸ்ரீதேவி அசோக் தனது கணவருடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார். மேலும், ஸ்ரீதேவி வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி அசோக் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். குழந்தைக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கும் வெல்கம் பேபி என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீதேவி அசோக்கிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிந்த ரசிகர்களும், சினிமா மற்றும் டிவி பிரபலங்கள், நன்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.