New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Sneha-sethupathi.jpg)
Actress Sripriya daughter gets married photos viral on Internet
Actress Sripriya daughter gets married photos viral on Internet
80களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கும் தொடர்ந்து ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் ராஜ்குமார் சேதுபதியை 1988இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சினேகா என்ற மகளும், நாகார்ஜுனா என்ற மகனும் உள்ளனர்.
இதில் சினேகா, லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில், சட்டத்தில் முதுகலை முடித்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று பல இயக்குனர்கள் இவரை அணுகிய போதிலும், இந்தியாவிலேயே பிரபல வழக்கறிஞராக வர வேண்டும் என்பதே தனது கனவு என்று கூறி சினேகா பட வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.
சினேகாவும், தொழிலதிபர் அன்மோல் சர்மாவும் லண்டனில் சந்தித்தபோது ஒருவரையொருவர் காதலித்தனர். பிறகு இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் வட இந்திய முறைப்படி பிப்ரவரி 6 ஆம் தேதி லண்டனில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து, தென்னிந்திய முறைப்படி மூன்று நாட்கள் திருமண விழா, சென்னையில் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ராதிகா சரத்குமார், சரத்குமார், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அன்மோல் சர்மா, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசிர்வாதத்துடன் சினேகாவின் கழுத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி தாலி கட்டினார்.
இரண்டு எம்பிஏ படித்த அன்மோல் ஷர்மா, லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியில் பணிபுரிகிறார். தொழிலில் ஈடுபட்டுள்ள இவரது குடும்பம் கடந்த 25 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ளது.
சினேகா-அன்மோல் திருமண புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுமணத் தம்பதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.