பிரிந்த கணவர், கைவிட்ட சினிமா; ஒரே அறையில் 36 ஆண்டுகள் வசித்த நடிகை: ஒரிஜினல் நீலாம்பரி கடைசியில் சந்தித்த சோகம்!

சினிமா கவர்ச்சிகரமான வெகுஜன ஊடகம் என்றாலும், அதற்குள் சொல்லப்படாத, வெளியில் தெரியாத பல இருண்ட பக்கங்கள் உண்டு. அப்படி ஒரு நடிகையின் வாழக்கையை பற்றி தான் பார்க்க போகிறோம்.

சினிமா கவர்ச்சிகரமான வெகுஜன ஊடகம் என்றாலும், அதற்குள் சொல்லப்படாத, வெளியில் தெரியாத பல இருண்ட பக்கங்கள் உண்டு. அப்படி ஒரு நடிகையின் வாழக்கையை பற்றி தான் பார்க்க போகிறோம்.

author-image
WebDesk
New Update
suchithra sen

இந்த நடிகை தனது அற்புதமான நடிப்பால் பெங்காலி மற்றும் இந்தி சினிமாவில் தனது பெயரைப் பெற்றார். பொழுதுபோக்கு மற்றும் கலைத் துறையில் அவரது பணி சர்வதேச பாராட்டுகளையும் பெற்றது. 

Advertisment

1963 மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில், சாத் பக்கே பந்தா படத்திற்காக சிறந்த நடிகைக்கான வெள்ளிப் பரிசை வென்றார், அதே நேரத்தில் 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அவர் தான் நடிகை சுசித்ரா சென். வங்காளத்தின் மிகவும் மதிக்கப்படும் நடிகைகளில் ஒருவரான சுசித்ரா சென் ஏப்ரல் 6, 1931 அன்று பிறந்தார். 

1955 ஆம் ஆண்டு வெளியான தேவதாஸ் திரைப்படத்தில், தலத் மஹ்மூத் பாடிய இந்தப் பாடல், சுசித்ரா சென், தில்லிப் குமார் மற்றும் வைஜெயந்திமாலா ஆகியோரைப் மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டது.

Advertisment
Advertisements

பிமல் ராய் இயக்கிய இந்தப் படம், காதல் மற்றும் மனவேதனையின் உன்னதமான கதையைச் சொல்கிறது. சுசித்ரா சென் பரோவாகவும், தில்லிப் குமார் தேவதாஸ் என்ற பெயரிடப்பட்ட வேடத்திலும் நடித்துள்ளனர். 

கிட்டத்தட்ட 3 தசாப்தங்களாக திரையுலகத்தை ஆண்ட இந்த நடிகை, ஒரு இருண்ட அறையில் யாருக்கும் தெரியாமல் இறந்துகிடந்த சோகம் அரங்கேறியது. 36 ஆண்டுகாலம் அறையிலிருந்து வெளியே வராமல் முகத்தை மூடியபடியே இருந்தார். 

ஆரம்பத்தில் சில ஆண்டுகள் பெங்காலி படங்களில் பணியாற்றிய பிறகு, சுசித்ரா சென் பாலிவுட்டில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுசித்ரா சென்னுக்கு 1972-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி அரசு கவுரவித்தது.

சுசித்ரா சென், முன்னணி ஹீரோவாக இருந்த உத்தம் குமாருடன் நடித்த தேவதாஸ், அனாதி, பம்பை கா பாபு, மம்தா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். 1975 வரை சுசித்ரா சென் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

ஆனந்தி போன்ற படங்கள் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்துள்ளன. தத்தா என்ற மற்றொரு படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

இருப்பினும், இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, சுசித்ரா சென் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதுதான் 1978-ல் வெளியான பிரணய் பாஷா. இதுவே அவரது கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முழுக்க முழுக்க தோல்வியடைந்தது.

'சாத் பக்கே பண்டா' என்ற பெங்காலி திரைப்படத்தில் நடித்ததற்காக சுசித்ரா சென் சிறந்த சர்வதேச நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963 ஆம் ஆண்டு மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் விருதைப் பெற்றதன் மூலம், இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றார்.

சுசித்ரா இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அவரது கணவரும், மாமியாரும் அவர் திரைப்படத் துறையில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

இதனால் சுசித்ரா தனது சினிமா வாழ்வில் தீவிரமாக இருந்தார். அது ஒரு கட்டத்தில் அவருக்கு ஆபத்தாக மாறிவிட்டது. தனது குடும்பத்திற்கும் கணவருக்கும் போதுமான நேரத்தை அவரால் ஒதுக்க முடியவில்லை. இதனால் இருவருக்கும் இடையேயான தூரம் அதிகரித்து சண்டைகள் தொடங்கின.

இந்த நிலையில், கணவர் மதுவுக்கு அடிமையாகி, சுசித்ராவை விட்டு அமெரிக்கா சென்றார். அவரது கணவர் 1970 இல் இறந்தார். இதன் காரணமாக, சுசித்ரா படிப்படியாக படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டியிருந்தது. அவர் 36 வருடங்களாக ஒரு அறையில் தன்னைப் பூட்டிக் கொண்டார். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

இறுதியாக சுசித்ரா சென் 83 வயதில் அதே அறையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: