/indian-express-tamil/media/media_files/2025/09/06/screenshot-2025-09-06-105229-2025-09-06-10-52-58.jpg)
இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய பல நடிகைகளில் நடிகை சுகன்யாவும் ஒருவர். அழகு, திறமை, அமைதி என அனைத்தும் இருந்தும் ஆரவாரமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிரடி காட்டியவர் நடிகை சுகன்யா. இவர் பல வெற்றிப்படங்களில் நடித்து இன்றும் ரசிகர்களின் மனதில் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து படத்தில், கருத்த மாச்சன் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான் என்ற ஒற்றை பாடலிலேயே தமிழ் ஆடியன்ஸின் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்ட சுகன்யா, கமல், விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு என அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
அதன்பிறகு, செந்தமிழ்பாட்டு, வால்டர் வெற்றிவேல், சக்கரைதேவன், மகாநதி, இந்தியன், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சுசகன்யா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி என பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சுகன்யா விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த சின்ன கவுண்டர் படம் வரலாறு காணாத அளவு மிகப்பெரிய வெற்றியடைந்து கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்தது. இப்படம் விஜயகாந்த் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படி அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து இன்று வரை முன்னணி நடிகையாகவே இருக்கிறார்.
நடிகை சுகன்யா 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் திருமணமாகி ஒரே ஆண்டில் அவரைவிட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துள்ளார். சுகன்யா. இவர் நடிப்பில் சன்டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மலையாளத்திலும் சில டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே தற்போது தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மீண்டும் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்ட பொழுது அவர் கூறுகையில், "மறுமணம் என்று நான் இதுவரை யோசிக்கவில்லை. அதே சமயம் அதை வேண்டாம் என்றும் சொல்லவில்லை. தற்போது எனக்கு 50 வயது ஆகிறது. இனிமேல் திருமணமாகி குழந்தை பிறந்து அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும்." என்று ஒரு புன்னகையுடன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.