சினிமா ஷூட்டிங்கை விட இதில் வருமானம் அதிகம்; இருப்பது வாடகை வீடுதான்: காமெடி நடிகை சுமதி ஹோம் டூர் வைரல்!

சினிமா உலகின் யதார்த்தமான பக்கத்தை, வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்த நடிகை சுமதி சினி உலகம் என்ற யூடியூப் சேனல் நடத்திய நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

சினிமா உலகின் யதார்த்தமான பக்கத்தை, வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்த நடிகை சுமதி சினி உலகம் என்ற யூடியூப் சேனல் நடத்திய நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
actress sumathi

சினிமா ஷூட்டிங்கை விட இதில் வருமானம் அதிகம்; இருப்பது வாடகை வீடுதான்: காமெடி நடிகை சுமதி ஹோம் டூர் வைரல்!

ஒரு காலத்தில் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த பல நடிகர்கள், இன்று கஷ்டப்படும் நிலை உள்ளது. சினிமா உலகின் யதார்த்தமான பக்கத்தை, நடிகை சுமதி சினி உலகம் என்ற யூடியூப் சேனல் நடத்திய நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 26 ஆண்டுகளாகத் திரையுலகில் இருக்கும் நடிகை சுமதி, சினிமா உலகின் சவால்கள், தனது கஷ்டமான வாழ்க்கை மற்றும் நடிகர் விஜயகாந்துடனான தனது அனுபவங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

Advertisment

சேலத்திலிருந்து சென்னைக்கு வந்ததில் இருந்து, சுமதி வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். அவரும் அவரது கணவரும் சினிமா துறையில் இருந்தாலும், வருமானம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. தற்போதும் சென்னையில் ரூ.9,000 வாடகை வீட்டில் தான் வசிப்பதாக கூறிய சுமதி, ஒருநாள் படப்பிடிப்புக்கு ரூ.10,000 வரை மட்டுமே சம்பளம் கிடைப்பதாகவும், சிலசமயம் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.15,000 வரை சம்பாதிப்பதாகவும் அவர் கூறினார். "என் மகன்கள், நான் ஒரு நடிகையாக இருந்தும், பணக்காரியாக இல்லையே என்று வருத்தப்படுகிறார்கள்" என்று அவர் பேசியபோது, அது அவரது மனவலியை வெளிப்படுத்தியது.

வாழ்க்கையில் தனக்கு கடவுள் இருக்கிறார் என்றால் அது விஜயகாந்த்தான். "அவர் என் வாழ்க்கை, என் கடவுள்," என்று உருக்கத்துடன் கூறினார். விஜயகாந்துடன் 4 படங்களில் பணியாற்றியதை நினைவு கூர்ந்த சுமதி, 'கேப்டன்' மற்ற நடிகர்களுக்கும் ஜூனியர் கலைஞர்களுக்கும் எவ்வளவு கருணையுடன் உதவக்கூடியவர் என்பதைப் பற்றிப் பேசினார். விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'மரியாதை' படத்தின் படப்பிடிப்பின்போது, ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் 28 நாட்களுக்கு உணவளித்ததை மறக்காமல் சுமதி குறிப்பிட்டார். விஜயகாந்த், அஜித், சத்யராஜ் போன்ற நடிகர்களைப் பற்றியும் அவர்களுடன் தனது அனுபவம் குறித்தும் சுமதி கூறினார்.

தான் கார், வீடு வாங்க வேண்டும் என்ற கனவுகளுடன் வாழ்ந்து வருவதாகக் கூறிய சுமதி, தனது சிறிய வீட்டையும், உடைந்துபோன டிவியையும் நேர்காணலில் வெளிப்படையாகக் காட்டினார். அவர் வீட்டு பூஜை அறையில் வைத்திருந்த "வெள்ளை எருக்க" செடியை, அதிர்ஷ்டத்திற்காக வளர்த்து வருவதாக அவர் கூறினார்.

Advertisment
Advertisements

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: