நடிகர் நகுலுடன் காதலில் விழுந்தேன் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே கூறியுள்ளார். அதில் விரைவில் மீண்டுவருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரிப்ஸ் ஏறுவதுபோல் உள்ளது. எனினும் சுனைனாவுக்கு அதிகாரப்பூர்வமாக என்னப் பிரச்னை என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுனைனா, நீர்ப்பறவை படத்தில் நடித்ததற்காக சிறந்த பிலிம்பேர் விருது கிடைத்திருந்தது. இவரின் முதல் படம் சம்திங் ஸ்பெஷல் என்ற தெலுங்கு படம் ஆகும்.
இவர் விஜய் உடன் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த பல்வேறு படங்கள் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“