நடிகை வீட்டில் திருட்டு
தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டர்லிங் சாலையில் வசித்து வரும் நிலையில், இவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த கைகடிகாரங்கள், லேப்டாப், செல்பொன் உள்ளிட்ட இரண்டு வருடமாக இவரது வீட்டில் வேலை செய்து வந்த நபர் திருடிச்சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
கவர்ச்சி நடனம் ஆட சன்னி லியோன் நிபந்தனை
ஆபாச நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடி வருகிறார். அதே சமயம் தான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சிறு பிள்ளைகள் அருகில் இருக்க கூடாது என்று நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தசரா ஃபர்ஸ்லுக் போஸ்டர்
தமிழ் தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது நானிக்கு ஜோடியாக தசரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ், பூர்ணா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சமந்தா படத்தில் ரிலீஸ் தேதி
முன்னணி நடிகையாக சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு தெலுங்கில் யசோதா என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், யசோதா படம் வரும் நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பத்து தல படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil