அம்மணி ஒரு ட்வீட் போட்டாங்க… விஜய் – அஜித் ஃபேன்ஸ் கட்டி உருளுறாங்க!

சுரேகா வாணி தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யின் சிறந்த ஆக்‌ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று கேட்டதும், விஜய் – அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் கட்டி உருண்டு சடுகுடு ஆடத் தொடங்கிவிட்டார்கள்.

surekha vani, ajith fans, vijay fans, social meda, actress surekha vani tweet, trending news, tamil trending news, vijay fans ajith fans clash

பிரபல குணச்சிதிர நடிகை சுரேகா வாணி ஒரே ஒரு ட்வீட் தான் போட்டிருக்காங்க… அதனால, விஜய் – அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் மாறிமாறி ரணகளப்படுத்தி வருகின்றனர். சுரேகா வாணி அப்படி என்ன ட்வீட் பண்ணியிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் – அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி மோதிக்கொண்டு ட்ரோல் செய்வது ரணகளம் செய்வதும் பிறகு அவர்களே ஓய்ந்துபோய் அமைதியாகி விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணி ஒரு ட்வீட் செய்து விஜய் – அஜித் ரசிகர்கள் இடையே சமூக ஊடகங்களில் மீண்டும் மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

நடிகை சுரேகா ராணி, கமல்ஹாசனின் உத்தமபுத்திரன், விக்ரமின் தெய்வத்திருமகள், விஜய்யின் ஜில்லா, மெர்சல், சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், அஜித்தின் விஸ்வாசம் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.

சுரேகா வாணி தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யின் சிறந்த ஆக்‌ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று கூறினார். சுரேகா வாணி இப்படி கேட்டதும்தான் விஜய் – அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் கட்டி உருண்டு சடுகுடு ஆடத் தொடங்கிவிட்டார்கள்.

சுரேகா வாணியிடம் அஜித் ரசிகர்கள் சிலர் விஜய் நடித்த சில படங்களின் பெயர்களை சொல்லி அவற்றைப் பாருங்கள் என்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் சிலர், அஜித் நடித்த படங்களை சொல்லி அவற்றைப் பாருங்கள் என்றனர். இப்படி விஜய் – அஜித் ரசிகர்களின் மோதல் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் – அஜித் ரசிகர்களின் மோதலைப் பார்த்த நடுநிலை ரசிகர் சிலர் இந்த பிரச்சினையில் தலையிட்டு, சுரேகா வாணியை டேக் செய்து, “உங்களுக்கு வேறு வேலை இல்லையா?. தேவை இல்லாமல் இப்படி கேள்வி கேட்டு ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்துகிறீர்களே? ஏன் நீங்கள் வேற்றுகிரகவாசியா? உங்களுக்கு எதுவும் தெரியாதா?” என்று சுரேகா வாணியை கண்டித்தனர். ஒருவழியாக, எப்படியே பிரச்னை ஓய்ந்து சமூக ஊடகம் சுமூக நிலைக்கு வந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress surekha vani tweet makes clash between vijay and ajith fans in social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com