Advertisment

ரட்சகன் சோனியா ஞாபகம் இருக்கா? 47 வயதில் பிகினி உடையில் வைரல் வீடியோ

1997-ம் ஆண்டு தமிழில் வெளியான ரட்சகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஷ்மிதா சென்.

author-image
WebDesk
New Update
Sushmitha

நடிகை சுஷ்மிதா சென்

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் சமீபத்தில் வெளியிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

1997-ம் ஆண்டு தமிழில் வெளியான ரட்சகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஷ்மிதா சென். மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இவர், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வர் படத்தில் ஷகலக பேபி என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான நிர்பாக் என்ற படத்தில் நடித்திருந்த 47 வயதான சுஷ்மிதா சென் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தற்போது சுஷ்மிதாவின் இன்ஸ்டா பக்கத்தில் 7 மில்லியனுக்கு அதிகமாக ஃபாலோயர்கள் உள்ள நிலையில். அவர் வெளியிடும் க்ளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சுஷ்மிதா சென் தற்போது வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில்  ‘நான் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போது எனக்கு புத்துணர்ச்சி உருவாகிறது, நான் கடினமாக உழைக்கிறேன் அதே போல் ஓய்வுக்காக சுற்றுலா செல்லவும் நேரம் ஒதுக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment