ஸ்வாதியின் கனவு நிஜமானது.. ஆசை காதலரை மணந்தார்!

ஸ்வாதி இந்தோனேசியாவில் செட்டில் ஆகிவிடுவார்

ஸ்வாதி இந்தோனேசியாவில் செட்டில் ஆகிவிடுவார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்வாதி

ஸ்வாதி

நடிகை ஸ்வாதி திருமணம் கடந்த வியாழனன்று ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவிருக்கிறது.

Advertisment

ஸ்வாதிக்கு டும் டும் டும்:

தெலுங்கில் பிரபல டிவி தொலைக்காட்சியில் ஆன்ங்கராக இருந்த நடிகை ஸ்வாதி தமிழில் சுப்பரமணியபுரம் படத்தின் மூலம கதாநாயகியாக அறிமுகமானர். முதல் படத்தில் துரு துரு கண்கள், எத்து பல் என்று ரசிகர்களின் மனதில் இவரின் முகம் ஆழமாக பதிந்து விட்டது.

அதன் பின்பு, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார். குறிப்பாக வடகறி படத்தில் இவரின் நடிப்பை இளைஞர்கள் பலர் ரசித்தனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில் ஸ்வாதிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கினர். இதனால் ஹதராபாத் பக்கம் சென்ற அவர், ஒரு சில படங்களில் நடித்தார். இந்நிலையில் ஸ்வாதிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

ஸ்வாதி ஸ்வாதி திருமணம்

இருவரும் ஒருவரையொருவர் புரிந்துக் கொண்டு தற்போது திருமன பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டிய நிலையில். கடந்த 30ம் தேதி ஸ்வாதிக்கும், விகாஸுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு குடும்பத்தார், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சியில் பிரமாண்ட வரவேற்பு இன்று  நடக்க உள்ளது.விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தாவில் வசிக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஸ்வாதி இந்தோனேசியாவில் செட்டில் ஆகிவிடுவார் என்று கூறப்படுகிறது.

Kollywood Swathi Reddy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: