Advertisment

ரஜினி, அஜித்துக்கு மட்டும் தான் 50 கொண்டாட்டமா? த்ரிஷாவுக்கு 50 லட்சம் கொண்டாட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trisha, நடிகை த்ரிஷா

trisha, நடிகை த்ரிஷா

பேட்ட மற்ரும் விஸ்வாசம் படம் 50 நாள் வெற்றியை கொண்டாடும் நேரத்தில் நடிகை த்ரிஷா தனது 50 லட்சம் ரசிகர்கள் சேர்க்கையை கொண்டாடி வருகிறார்.

Advertisment

பதினாறு ஆண்டுகள் ஆகியும் என்றும் பதினாறாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை த்ரிஷா. கடந்த ஆண்டு இறுதியில் அவர் நடிப்பில் வெளியான 96 படம் ஜெஸ்சியை மறக்க செய்து ஜானுவை காதலிக்க செய்து விட்டது. இதற்கு அடுத்தபடியாக பேட்ட படத்தின் சரோ கதாபாத்திரத்தில் ஹோம்லி அழகியாக அனைவரையும் தன்வசம் இழுத்தார்.

நடிகை த்ரிஷா கொண்டாட்டம்

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குடியேறி வரும் நிலையில், த்ரிஷாவுக்கோ ட்விட்டரில் 50 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். 5 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற மகிழ்ச்சியை அண்மையில் த்ரிஷா, தனது கார்ட்டூன் வடிவ இமேஜை பதிவிட்டு, சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

February 2019

கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான பேட்ட படத்தின் கொண்டாட்டத்தை ரஜினி ரசிகர்கள், கார்த்திக் சுப்புராஜ், சன் பிக்சர்ஸ், சிம்ரன் மற்றும் த்ரிஷாவும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒரு படி மேலே சென்று த்ரிஷா பேட்ட 50 மட்டுமின்றி தனது டுவிட்டரின் 50 லட்சம் ரசிகர்கள் சேர்க்கையும் கொண்டாடி வருகிறார்.

Tamil Cinema Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment