Advertisment

ஈரோட்டில் மலையாளப் பட ஷூட்டிங்கில் திரிஷா; வேன் முன்பு திரண்ட ரசிகர்களின் பெருங்கூட்டம்

நடிகை திரிஷா ஈரோடு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள், பொதுமக்கள் அவரைப் பார்ப்பதற்காக அவருடைய வேனுக்கு முன்பு பெரும் கூட்டமாக திரண்டுவிட்டனர்.

author-image
WebDesk
New Update
Trisha Photo

நடிகை திரிஷா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகை திரிஷா ஈரோட்டில் நடைபெற்றுவரும் 'ஐடென்டிட்டி' என்ற மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். நடிகை திரிஷா வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள், பொதுமக்கள் அவருடைய கேரவன் வேனுக்கு வெளியே பெரும் கூட்டமாக திரண்டுவிட்டனர்.

Advertisment

மலையாளப் படமான ‘ஐடெண்டிட்டி’ (அடையாளம்) படத்தின் படப்பிடிப்பு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில், நடிகை திரிஷா மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாளப் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகை திரிஷா வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்க்க அவரது வேனிட்டி வேனுக்கு வெளியே பெரும் கூட்டமாகக் கூடினர். திரிஷா தனது வேனில் இருந்து தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தார். 

டிசம்பர்ம் 2023 முதல் ஷூட்டிங் நடந்து வரும்‘ஐடெண்டிட்டி’ படத்தை அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்குகிரார்கள். இந்த படத்தில் மந்திரா பேடி மற்றும் வினய் ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை திரிஷா அஜித் குமாரின் 'விடா முயற்சி', மோகன்லாலின் 'ராம்', கமல்ஹாசனின் 'தக் லைஃப்' மற்றும் சிரஞ்சீவியின் 'விஸ்வம்பர' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

திரிஷா இப்போது விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள தனது 'கில்லி'யின் ரீ ரிலீஸில் ஈடுபட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment