/indian-express-tamil/media/media_files/2025/08/27/screenshot-2025-08-27-192948-2025-08-27-19-30-04.jpg)
நடிகை வடிவுக்கரசி சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் சில திரைப்படங்களில் வில்லியாகவும் நடித்திருந்தார். அதிலும் முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசனை பாடாய்படுத்தி எடுத்த வடிவுக்கரசியை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
முதல் மரியாதை திரைப்படத்தில் வடிவுக்கரசி பேசும் குத்தலான பேச்சை பார்த்து அவரைத் திட்டி தீர்க்காத ரசிகர்களே கிடையாது என்று சொல்லலாம். அதுபோல ரஜினி நடிப்பில் உருவான அருணாச்சலம் திரைப்படத்தி கூன் போட்ட பாட்டியாக வந்து பலரையும் மிரள வைத்தவர். 90ஸ் கிட்ஸ்களில் சூனியக்கார கிழவி கதையை கேட்கும் போதெல்லாம் வடிவுகரசி முகம் தான் பலருக்கும் நினைவில் வந்திருக்கும்.
அதுபோல எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்திவிடும் வடிவுக்கரசி இப்போது சினிமா மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு சில நடிகைகள் புகழின் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும்தான் பல தலைமுறை நடிகர்களோடு நடித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை வடிவுக்கரசியும் ஒருவர்.
சிவாஜி காலத்திலிருந்து இப்போது உள்ள இளம் கதாநாயகர்களுடனும் கூட நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகள் குறித்து பேசி இருந்தார்.அப்போது அவர் கேப்டன் விஜயகாந்த் பற்றி பேசியிருந்தார்.
"'வைதேகி காத்திருந்தாள்' பட ஷூட்டிங்கின் போது, நான் விஜயகாந்த் சாரிடம் சென்று ஒரு படத்தில் நடிக்க கேட்டேன். அதற்க்கு அவர் நன் வேண்டாம், மோகனிடம் கேளுங்கள். அவர் தான் இப்போது பிரபலமாக உள்ளார். அதனால் உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.
நான் உடனே மோகனிடம் கேட்டேன், அவர் இரண்டு வருடங்களுக்கு பிஸி என்று கூறிவிட்டார். நான் மீண்டும் விஜயகாந்திடம் சென்று கேட்டேன். அபோது அவர் சரி என்று கூறி நடித்தார். என்னை தயாரிப்பாளராகிய நடிகர் அவர் தான்.
அந்த நேரம் அவரே மிகவும் பிரபலமான ஒரு நடிகர் தான். அவரே வேறு ஒரு நடிகரை காய் காட்டும் போது, அது அவரின் பெருந்தன்மையையும் நல்ல மனதையும் குறிக்கிறது." என்று கூறினார் வடிவுக்கரசி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.