காதலருடன் திருமணம்; கண்ணீர் விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை: வைரல் வீடியோ- போட்டோஸ்

நடிகை வைஷாலி தனிகா திருமணத்தில் காதலர் தேவ் தன் கழுத்தில் தாலி கட்டியபோது எமோஷனலாகி கண் கலங்கி ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோவை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

actress Vaishali Thaniga, actress Vaishali Thaniga marriage video, actress Vaishali Thaniga marriage photos, actress Vaishali Thaniga emotional tears, actress Vaishali Thaniga marriage function video goes viral, pandian stores serial actress Vaishali Thaniga , Gokulathil Seethai actress Vaishali Thaniga, actress Vaishali Thaniga married her lover, வைஷாலி தனிகா காதலருடன் திருமணம், கண்ணீர் விட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வைஷாலி தனிகா, வைஷாலி தனிகா வைரல் வீடியோ- போட்டோஸ், vijay tv, vaishali thaniga

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி தனிகா தனது காதலர் தேவ்வை கரம் பிடித்துள்ளார். திருமணத்தின்போது காதலர் தேவ் தனது கழுத்தில் தாலி கட்டியபோது, வைஷாலி தனிகா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் ஜோடி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா. பின்னர், அவர் அந்த சீரியலில் இருந்து விலகி நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில், ஜீ தமிழ் டிவியில் கோகுலத்தில் சீதை சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வைஷாலி தனிகா, சின்னத்திரைக்கு நடிக்க வருவதற்கு முன்பே சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘கதகளி’ படத்தில் நடித்துள்ளார். மேலும், காதல் கசகுதய்யா, திரி, எங்க அம்மா ராணி, கடுகு, ராஜா மந்திரி, சர்கார், பைரவா, ரெமோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மாலை நேரம் என்ற குறும்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

சென்னையில் செம்படம்பர் 26, 1994-ல் பிறந்த வைஷாலி தனிகா, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீசன் 1 சீரியல்களில் நடித்தன் மூலம் டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது, கோகுலத்தில் சீதை, மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வரும் வைஷாலி தனிகாவிற்கு சமூக ஊட்கங்களில் ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அண்மையில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய வைஷாலி தனிகா, தனது காதலர் சத்யதேவ் உடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை தெரிவித்தார். பேச்சிலராக இதுதான் தனது கடைசி பிறந்தநாள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இருவரின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டி திருமணத்துக்கு சம்மதித்தார்.

இந்த நிலையில், வைஷாலி தனிகா – சத்யதேவ் திருமணம் சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. வைஷாலி தனது திருமண நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

திருமணத்தில் வைஷாலி தனிகா காதலர் தேவ் தன் கழுத்தில் தாலி கட்டியபோது எமோஷனலாகி கண் கலங்கி ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார். இந்த வீடியோவை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். வைஷாலி தனிகாவின் திருமண வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய வைஷாலிக்கு மகிழ்ச்சி பொங்கட்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வைஷாலி தனிகாவின் திருமண வீடியோ சமூக ஊட்கங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress vaishali thaniga emotional tears while her marriage function video goes viral

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com