Advertisment

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம்… ஃபீல் ஆகும் ரசிகர்கள்!

நடிகை வைஷாலி தனிகா பேச்சிலராக இது தனது கடைசி பிறந்தநாள், விரைவில் தனது காதலர் சத்யா தேவ்-ஐ திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, ஃபீல் ஆன ரசிகர்கள் பலரும் வைஷாலி தனிகாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

author-image
WebDesk
Sep 29, 2021 12:18 IST
Actress Vaishali Thaniga gets soon marriage, vaishali thaniga says this is my last birthday as a bachelor, நடிகை வைஷாலி தனிகா, விஜய் டிவி, வைஷாலி தனிகாவுக்கு விரைவில் திருமணம், நடிகை வைஷாலி தனிகா பிறந்தநாள், vijay tv, Actress Vaishali Thaniga, tamil serial news, vijay tv serial news

விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி தனிகா, இதுதான் தனது கடைசி பேச்சிலர் பிறந்தநாள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தனது பிறந்தநாளில் அறிவித்துள்ளார்.

Advertisment

நடிகை வைஷாலி தனிகா விஜய் டிவியின் மாப்பிள்ளை, ராஜா ராணி மற்றும் மகராசி போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது, கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வைஷாலி தனிகா நடித்து வருகிறார். வைஷாலி தனிகா இதுவரை நடித்த சீரியல்களில் எல்லாம் பெரும்பாலும்ம் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான், நடிகை வைஷாலி தனிகா, இதுதான் தனது கடைசி பேச்சிலர் பிறந்தநாள் என்று கூறி விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை உறுதி செய்துள்ளார்.

விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி தனிகா செப்டம்பர் 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருடைய பிறந்த நாளில், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி நடிகை வைஷாலி தனிகா இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், “பேச்சிலராக இது என்னுடைய கடைசி பிறந்த நாள்.. விரைவில் நான் திருமதி தேவ் ஆகப் போகிறேன். அதற்கு பிறகு எல்லாமே குடும்பம்தான். நீங்கள்தான் என் நாளை மகிழ்ச்சியானதாக மாற்றியுள்ளீர்கள். சத்யா தேவ் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், வைஷாலி தனது இந்த பிறந்தநாளை சிறப்பான ஒன்றாக ஆக்கியதற்கு நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை வைஷாலி தனிகா பேச்சிலராக இது தனது கடைசி பிறந்தநாள், விரைவில் தனது காதலர் சத்யா தேவ்-ஐ திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, ஃபீல் ஆன ரசிகர்கள் பலரும் வைஷாலி தனிகாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Serial Actress Vaishali #Vijay Tv #Actress Vaishali Thaniga
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment