நடிகை வனிதா விஜயகுமார் 40 வருடங்களுக்கு பிறகு தனக்கும் பிரபல நடிகைக்கும் இருக்கும் உறவு குறித்து தெரிந்துகொண்டதாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார்.
அதன்பிறகு திருமணம் தொடர்பான சர்ச்சைகள் வனிதாவை சுற்றி வளைக்க சில ஆண்டுகள் திரைத்துறையைவிட்டு விலகியிருந்தார். அதன்பிறகு விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார்.
தற்போது பல படங்களை கையில் வைத்துள்ள வனிதா, சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி பலவிதமமான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவர் முக்கிய கேரகட்டரில் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வனிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை விமலா ராமன் தனக்கு உறவுமுறை என்பதை தெரிந்துகொண்டதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
2006-ம் ஆண்டு தமிழில் வெளியான பொய் படத்தின் மூலம் அறிமுகமானவர் விமலா ராமன். அதன்பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த அவர், 2008-ம் ஆண்டு சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
அதன்பின்னர் தெலுங்கு கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்த விமலா ராமன், 2019-ம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தின் ரீ.என்ட்ரி கொடுத்திருந்தார். இதனிடையே வனிதா தற்போது வெளியிட்டுள்ள பதிவில், 40 வருடங்களுக்கு பிறகு விமலா ராமன் தனது உறவுக்காரர் என்று தெரிநந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு பிறகு என் தாயாரின் குடும்பத்தில் இருந்து நீண்ட காலமாக இழந்த ஒரு உறவினர் சகோதரி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். விமலா ராமன், என் இனிய சகோதரி மற்றும் எஸ்.ஐ.ஆர்.சி.டி. முத்துசுவாமி ஐயரின் பெருமைக்குரிய கொள்ளுப் பேரப்பிள்ளைகள்... ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி... இன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சிலை உயர்ந்து நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil