Advertisment

வனிதா டான்ஸ் பார்ட்டி: கூட இருப்பது விஜய் டி.வி நடிகரா?

சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

author-image
WebDesk
New Update
Vanitha-Vijayakumar

Only less opportunities for Tamil actors says Vanitha vijayakumar

சமீப காலமாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதால், சின்னத்திரை பக்கம் திரும்பாத நடிகை வனிதா விஜயகுமார் தற்போது விஜய் டிவி நடிகர்களுடன் பார்டி கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வனிதா அதன்பிறகு சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுத்தார்.

சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக அவருக்கு படவாய்ப்பு குவிந்து வரும நிலையில், பிரஷாந்தின் அந்தகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் பேஷன் டிசைன், மேக்கப் ஆர்டிஸ்ட் என பன்முக திறமைகளை வெளிகாட்டி வரும் வனிதா அவ்வப்போது சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் பதிவுகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வரும் வனிதா சமீபத்தில் ஜீதமிழில் வெளியான மாரி தொடரில் கெட்ஸ் ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு சின்னத்திரையில் இருந்து விலகியுள்ள அவர், தனது பிஸினஸ் மற்றும் பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே தற்போது சின்னத்திரையின் விஜய் டிவி நட்சத்திரங்களுடன் இவர் பங்கேற்றுள்ள பார்டி நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு நண்பர்களுடன் இணைந்த பார்ட்டி என்று வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில் ரோபோ சங்கர், சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜின் உள்ளிட்ட பலருடன் இணைந்துள்ளார்.

இந்த படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வனிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment