குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மணிமேகலை – பிரியங்கா இடையே எழுந்த மோதல் தற்போது வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ள கருத்து வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், தொகுப்பாரளாக பங்கேற்ற மணிமேகலை, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும், தனது வேலையை பார்க்க விட மாட்டேங்கிறார். எனது வேலையில் தலையிடுகிறார். எனக்கு தன் மானம் இருக்கு என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் பிரியங்காவை தான் சொல்கிறார் என்ற கூறி, பிரியங்காவுக்கு எதிராக கருத்து சொல்ல தொடங்கினர். மேலும், பிரியங்கா வந்ததில் இருந்து விஜய் டிவியில் இருந்து வெளியேறிய தொகுப்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு கடுமையாக விமர்சித்து மணிமேகலைக்கு ஆதரவாக பேசியிருந்தனர். அதே சமயம் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து சொன்ன நிலையில், அவர்களை குறிப்பிடும் வகையில், சொம்பை வைத்து மணிமேகலை வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த மோதல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது வனிதா விஜயகுமார் தனது கருத்தை தெரிவித்துள்ளர். இதில், அனைவருக்கும் தனமானம் இருக்கிறது. அதன் காரணமாக நிகழ்ச்சியில், இருந்து வெளியேறலாம் அது தவறு இல்லை. அதே சமயம் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாரளாக இருக்கும்போது மற்றவர்கள் அங்கு பேசக்கூடாது என்பது தவறு. ஒரு படத்தில் நடிக்கும்போது அனுபவம் உள்ள நடிகர்கள் இயக்குனருக்கு தங்களது கருத்துக்களை சொல்லலாம் அது போலத்தான் இதுவும்.
Advertisment
Advertisement
இதற்கு சிலர் மணிமேகலை கணவருடன் இருக்கிறார். அதனால் அவருக்கு தன்மானம் இருக்கிறது. பிரியங்கா கணவருடன் இல்லை. அதனால் அவருக்கு தன்மானம் இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி பேசுபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். மணிமேகலை அடாவடியான பொண்ணுதான். கணவரையே வாடா போடா என்று பேசுவார். ஆனால் வீடியோவில், சொம்பு தூக்கி காட்டியது தவறான செயல். டிவி நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது எனக்கும் தெரியும். பெண் என்பதால் ஒருவரின் கேரக்டரை தவறாக பேசுவது தவறான ஒரு விஷயம். இந்த மோதலுக்காக குரல் கொடுத்தால் அவர்களை சொம்பு என்று சொல்வது தப்பாக இருக்கிறது.
பிரியங்கா என்னிடம் பேசினார். அவர் இங்கு இல்லை. அயர்லாந்தில் இருக்கிறார். அவர் ஓடிப்போய்விட்டார் என்று கூட சொல்கிறார்கள். அவர் என்னிடம் போன் செய்து அழுதார். நடந்துத நடந்துவிட்டது. இவ்வளவு ஏன் டேமேஜ் செய்ய வேண்டும்? என்று வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“