மஞ்சுளாவின் கடைசி தருணங்கள்... கொடுத்த சத்தியத்தை மறந்த விஜயகுமார்... ஓபனாக உடைத்த வனிதா!

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் கூட எங்கள் வீட்டில் நடந்த கதையைதான் அப்படியே எடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் கூட எங்கள் வீட்டில் நடந்த கதையைதான் அப்படியே எடுத்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
மஞ்சுளாவின் கடைசி தருணங்கள்... கொடுத்த சத்தியத்தை மறந்த விஜயகுமார்... ஓபனாக உடைத்த வனிதா!

தனது அம்மா மஞ்சுளா இறக்கும்போது அப்பா விஜயகுமாரிடம் சத்தியம் வாங்கியதாகவும், தற்போது விஜயகுமார் அந்த சந்தியத்தை காப்பாற்றிவில்லை என்றும் நடிகை வனிதா கூறியுள்ளார்.

Advertisment

சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரல் ராணியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் சாதாரணமாக ஒரு பதிவை வெளியிட்டால் கூட அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் ரசகர்களுக்கு அவருக்கு தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

தனது முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகியிருந்தாலும், திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகியிருந்த வனிதா, குக் வித் கோமாளி பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமானார். தற்போது தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் வனிதா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image
Advertisment
Advertisements

இதனிடையே சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனிதா விஜயகுமார், தனது அம்மா இறப்பதற்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பில், வனிதா எனது மகளே இல்லை. இனி எனக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறியது குடும்பத்தினர் சொல்லிதான் கூறியதாக தெரிவித்திருந்தார். அப்போது அவரது உடல்நிலை சரியில்லாததை அனைவரும் பயன்படுத்திக்கொண்டனர்.

மேலும் மஞ்சுளா இறப்பத்கு முன் வனிதாவை விட்டுவிடகூடாது அவளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விஜயகுமாரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். அதேபோல் தனியாக வீடு வாங்கி தருகிறோம் நீ வெளியில் எங்கும்போக வேண்டாம் என்று வனிதாவிடம் சத்தியம் கேட்டதற்கு அவர் முடியாது என்று மறுத்துவிட்டதால், மஞ்சுளா இறந்த பின் தனது அம்மாவை பார்க்க அப்பா விஜயகுமார் விடவில்லை என்று கூறியுள்ளார்.

publive-image

எவ்வளவோ கெஞ்சியும் வனிதாவை விஜயகுமார் விடாத நிலையில். கடைசியில் ரஜினிகாந்த் சொல்லித்தான் விஜயகுமார் வனிதாவை அவரது அம்மாவின் முகத்தை பார்க்க அனுமதித்தார் என்றும், அருண்விஜயுடன் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய டிசைனர் நான்தான் எப்போதும் என்னிடம் பேசுவார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நான் அவரை பார்த்து பேச எவ்வளவோ முயற்சித்தபோதும அவர் என்னிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் கூட எங்கள் வீட்டில் நடந்த கதையைதான் அப்படியே எடுத்திருக்கிறார்கள். அம்மாவின் கடைசி காலத்தில் யார் எது சொன்னாலும் அப்படியே நம்பும் மற்றும் செய்யும் நிலைக்கு வந்துவிட்டார். தனது குடும்பத்துடன் இல்லை என்றாலும வனிதா தற்போது குடும்பத்தினர் பற்றி பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: