/tamil-ie/media/media_files/uploads/2022/06/Vanithas.jpg)
இதுதான் கர்மா... சும்மா விடாது... யாரை சொல்கிறார் வனிதா விஜகுமார்?
பீட்டர் பால் மனைவிக்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும் ரவீந்திரன் தனது கருத்துக்களை பேசியிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Vanithas.jpg)
Advertisment
சின்னத்திரையில் தற்போதைய ஹாட் டாப்பிக் என்ற என்று கேட்டால், அது ரவீந்தர் – மகாலட்சுமி திருமணம் தான். சினத்திரை நடிகையாக மகாலட்சுமி, சமீபத்தில் லிப்ரா புரோடக்ஷன்ஸ் நிறுவனர் ரவீந்திரன் சந்திரசேகரை திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே சமயம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்த விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். ஆனாலும் இவர்களை பற்றிய ட்ரோல் மற்றும் விமர்னங்களை மறைக்கும் அளவிற்கு திருமண புகைப்படங்கள் வைரலாக பரவியது.
இதனிடையே ரவீந்தர் தயாரிப்பார் என்பதால் பணத்திற்காக மகாலட்சுமி அவரை திருமணம் செய்துகொண்டதாக பலரும் கூறி வந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு பேட்டி அளித்த ரவீந்திரன் மகாலட்சுமி இருவரும் தங்கள் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
இதனிடையே நடிகை வனிதா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வரும் நிலையில், ரவீந்திரன் – மகாலட்சுமி குறித்துதான் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். வனிதா கடந்த சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் நடந்த ஒரிரு நாட்களில் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், பீட்டர் பால் மனைவிக்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும் ரவீந்திரன் தனது கருத்துக்களை பேசியிருந்தார். இந்த கருத்து வைரலாக பரவிய நிலையில், நேரலை பேட்டி ஒன்றில் ரவீந்திரன் பேசிக்கொண்டிருக்கும்போது கூட வனிதா உள்ளே வந்ததும் அவர் தனது பேச்சை நிறுத்திக்கொண்டார்.
Too happily busy to be bothered about anyone else’s LIFE …. Karma is a B***H … she knows to give it back .. I trust her completely 🤣😉
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 5, 2022
இந்த சர்ச்சை காரணமாக ரவீந்திரன் மகாலட்சுமி குறித்து இதுவரை எந்த கருத்தும் கூறாமல் இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், கர்மா ஈஸ் பூமரங் அவளுக்கு அதை திருப்பி கொடுக்க தெரியும்.. நான் அவளை முழுமையாக நம்புகிறேன் என குறிப்பிட்டு, அடுத்தவர்கள் வாழக்கையை பார்க்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியாக இருப்பதாக கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.