Advertisment

லியோ படத்தில் வனிதா மகன்: ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!

அதாவது படத்தில், நடிகர் விஜய் ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது அவரை மடியில் வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி இருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Leo sri Hari picture

லியோ படம் முதல் நாளில் மட்டும் ரூ.140 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ.இத்திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது முதல் நாளில் மட்டும் ரூ.140 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமாரியின் மகன் ஹரி நடித்துள்ளார்.

Advertisment

அவர் ஒரு காட்சியில் தோன்றுகிறார். நடிகர் விஜய்யும், வனிதா விஜயகுமாரும் இணைந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளனர்.

அதாவது படத்தில், நடிகர் விஜய் ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது அவரை மடியில் வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி இருக்கின்றனர்.

அதாவது இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய், நடிகர் அர்ஜுனிடம் நான் லியோ இல்லை என்பதை நிரூபிப்பதற்காக புகைப்படம் சிலவற்றை காட்டுகிறார்.

அதில் தன்னுடைய மகனின் முதலாவது பிறந்தநாள் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை காட்டுகிறார். அது ஸ்ரீஹரியோடு விஜய் எடுத்த புகைப்படம் தான்.

நடிகை வனிதா விஜயக்குமார் மகன் ஹரி குறும்படங்களில் நடித்துவருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment