Advertisment

ஹீரோவாக நடிக்கும் மகன்... வாய்ப்பு கிடைத்தால் பேசுவீங்களா? வனிதா விஜயகுமார் எமோஷ்னல் பதில்

நடிகை வனிதா விஜயகுமார் தனது தனது மகன் திரைப்படத்தில் ஹிரோவாக நடிப்பது குறித்து எமோஷனலாகப் பேசியது சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanitha Vijayakumar

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, அவர் எதைப் பற்றி பேசினாலும், என்ன பேசினாலும் சமூகவலைதளங்களில் வைரல்தான். நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் திரையுலகில் மூத்த நடிகர் விஜயகுமார் மற்றும் மறைந்த நடிகை மஞ்சுளாவின் மகள் ஆவார். 

Advertisment

நடிகை வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.  இந்த படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹேசல் சைனி கதாநாயகியாக நடிக்கிறார். சிங்கத்தை மயமாக வைத்து எடுக்கும் இப்படத்திற்கு Mambo என்று பெயரிடப்பட்டுள்ளது

அண்மையில் விஜய் ஸ்ரீஹரி நடிக்கும் Mambo படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தனது மகன் விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிப்பதை அறிந்த வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் எமோஷனலாக பதிவிட்டார்.  அதில், “இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகப்போகிற எனது மகன் விஜய் ஸ்ரீ ஹரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குருவாக ஸ்ரீஹரிக்கு வழி நடத்துகிற ரஜினி அங்கிளுக்கும் எனது நன்றி. எனது குழந்தை ஹீரோவாக போகிறான். எனக்கு கொடுக்கிற அன்பையும் ஆதரவையும் என்னுடைய மகளுக்கும் கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார், நடிகர் பிரசாந்த் உடன் நடிக்கும் அந்தகன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் எமோஷனலாக பேசியிருந்தார். 

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகை வனிதா விஜயகுமார், என்னுடைய நிலைமை மிக மோசமாக இருக்கிறது. உண்மைய சொல்லணும்னா கடவுள் என்னை நிறைய ஆசிர்வாதம் பண்ணியிருக்காரு. ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு குறை இருக்கும். யாருடைய வாழ்க்கையும் சுமுகமாக இருக்காது. ஆனால், இந்த நிலையில், உங்க பையன் ஹீரோவாக நடிக்கிறான் அதே சமயத்துல நீங்களும் ஹீரோயினா படத்துல நடிச்சிட்டு இருக்கீங்க என்று நிறைய பேர் எனக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.” என்று பேசினார். 

தொடர்ந்து தனது மகன் குறித்து பேசிய வனிதா விஜயகுமார், “எனக்கு 18 வயதிலே ஸ்ரீஹரி பிறந்து விட்டான். அதுக்காக நான் எப்பவும் வருத்தப்பட்டது கிடையாது. அந்தக் குழந்தை அப்போ பொறந்ததால் தான் இப்போ ஹீரோவா வந்து நிற்கிறான். என் மகள் ஜோவிகாவை நிறைய நிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், என் மகன் ஸ்ரீஹரியை அப்படி நீங்க எங்கேயும் பார்த்திருக்க முடியாது. அப்படிப்பட்டவன் இப்போது ஹீரோவாக நடிக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.” என்று கூறினார்.

மேலும், “இதை நான் சொல்லணும்னு அவசியம் கிடையாது. ஒரு தாயாக என்னுடைய பாசம் என்றுமே இருக்கும். அதே மாதிரி இந்த படத்தில் நடிப்பதற்காக சிங்கத்தோடு பயிற்சி எடுத்திருக்கிறான். அது ரொம்ப ஆபத்தானது.” என்று வனிதா விஜயகுமார் கூறினார்.

“தாய்லாந்துல இருக்கிற வனப்பகுதிகளிலிருந்து சிங்கத்தை தேர்ந்தெடுத்து இருக்காங்க. அப்போ நானும் கரெக்டாக ஒரு படம் ப்ரொடக்ஷன் பண்றதுக்காக தாய்லாந்தில்​ இருந்தேன். நானும் என் பையனும் ஒரே பூமியில் எங்கள் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். அதுவும் தாய்லாந்தில் நடந்ததனால், அம்மாவின் பாசம் மற்றும் ஆசிர்வாதம் அவனுக்கு எப்போதும் இருக்கும்.” என்று வனிதா விஜயகுமார் தனது மகனை வாழ்த்தியுள்ளார். 

“ஸ்ரீ ஹரி ரொம்ப டேலண்டான குழந்தை. அவன் கண்ணை பார்க்கும் போது என் கண்ணை பார்க்கிற மாதிரி இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. கடைசியில் உங்கள் பையனிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் பேசுவீங்களா என்ற கேள்விக்கு, எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்” என்று வனிதா விஜயகுமார் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment