New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Vanaitha.jpg)
நடிகை வனிதா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் நடித்த மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்து ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
ஜீவி பிரகாஷ் நடித்த ‘பென்சில்’ படத்தை இயக்கிய இயக்குனர் மணிநாகராஜ் ‘வாசுவின் கர்பிணிகள்’ படத்தை இயக்கியுள்ளார். அவின் மோகன் சித்தாரா இசையமைக்கிறார். பிகே வர்மா ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.
இவர்களுடன் இந்த படத்தில் மருத்துவராக விஜய் டிவி’ பிரபலமான ‘நீயா நானா’ நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தில் வனிதாவின் கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த படத்தில், நடிகை வனிதா ‘பல்லவி’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போல போஸ் கொடுத்துள்ளார். நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த திடீர் வைரல் போட்டோ சமூக இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.